5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
Heavy rain is likely tomorrow in 5 districts Weather Research Center warns
தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை கேரளாவில் கடந்த ஜூன் மாதம் தொடக்கத்திலேயே பெய்ய தொடங்கியது, இதனால் தமிழகத்தில் நீலகிரி ,கோயம்புத்தூர், திண்டுக்கல், கன்னியாகுமரி ,நெல்லை, பாபநாசம், தென்காசி போன்ற மேற்கு தொடர்ச்சி மலைகளில் கனமழை பெய்தது .இந்த தென்மேற்க்கு பருவ மழையானது தொடர்ந்து கேரளாவில் பெய்து வந்ததால் அதன் தாக்கம் தமிழகத்திலும் காணப்பட்டது .இதையடுத்து தமிழகத்தில் மேல் அடுக்கு சுழற்சி அந்த வானிலை நிகழ்வுகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வந்தது சென்னையில் அவ்வப்போது மழை பெய்து மக்களை குளிர்வித்தது குறிப்பாக சில வாரங்களில் அதிகமான வெப்பநிலையும் காணப்பட்டது. இந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதேபோல தென் இந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.அதுமட்டுமல்லாமல் ராயலசீமா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகபட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை ,நாளை மறுநாள் வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
11 தேதி முதல் 14-08-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ”இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
English Summary
Heavy rain is likely tomorrow in 5 districts Weather Research Center warns