10 ஆண்டுகளாக உங்கள் ஆட்சிதானே? அதிமுக முன்னாள் அமைச்சருக்கு செக் வைத்த நீதிபதி! - Seithipunal
Seithipunal


அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் தன்னை மனுதாரராக இணைக்க வேண்டும் என்று, அதிமுக அமைப்பு செயலாளர் ஜெயக்குமார் தாக்கல் செய்த மனு மீது விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது.

இந்த விசாரணையின்போது, "கடந்த 10 ஆண்டுகளாக நீங்கள்தானே (அதிமுக) ஆட்சியில் இருந்தீர்கள். இது பற்றி புகார் கொடுக்கவில்லை. 

எந்த கேள்வியும் எழுப்பவில்லை. இப்போது இதில் நுழைய என்ன காரணம்?” என்று ஜெயக்குமார் தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

மேலும், இந்த மனுவை ஏற்றுக்கொள்வது குறித்து வரும் அக்டோபர் 3ம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Ponmudy case ADMK Jayakumar


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->