#Tenkasi || திமுக நிர்வாகிகள் இடையே கும்மாங் குத்து! சாதிர் பதம் பார்த்த இஞ்சி இஸ்மாயில்!
DMK officials attacking each other and admit in tenkasi hospital
தென்காசி நகர மன்ற தலைவராகவும் திமுக நகர் தலைவராகவும் இருந்து வரும் சாதிர் என்பவருக்கும் திமுக மாவட்ட சிறுபான்மையின அமைப்பாளராக இருந்து வரும் இஸ்மாயில் என்கிற இஞ்சி இஸ்மாயிலுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடை ஒன்றின் டீ குடித்துக் கொண்டே நகராட்சி பணிகளை ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரரிடம் இஞ்சி இஸ்மாயில் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது நகராட்சி ஒப்பந்ததாரர் ஒப்பந்தம் எடுப்பதற்காக சாதிர் குறிப்பிட்ட தொகையை கமிஷனாக பெற்றுள்ளதாக கூறியுள்ளார். இவர்கள் பேசும் வீடியோ முகநூல் பக்கத்தில் வெளியாகி பரவத் தொடங்கியது.

இந்த வீடியோ வெளியான மறுநாள் அந்த வழியாக வந்த சாதிர் தன்னை பற்றி வேண்டுமென்று அவதூறு பரப்புவதற்காக வீடியோ எடுத்து பரப்பினாயா என இஞ்சி இஸ்மாயிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வாக்குவாதம் முற்றி இருவருக்கும் இடையே அடிதடியான நிலையில் தென்காசி நகர மன்ற தலைவர் சாதிரின் கையை திமுக மாவட்ட சிறுபான்மையினர் அமைப்பாளர் இஞ்சி இஸ்மாயில் கடித்ததாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து இருவரும் அங்கிருந்து சென்ற நிலையில் தனது மகனுடன் சாதிர் வீட்டுக்கு சென்ற இஞ்சி இஸ்மாயில் சாதிரின் மனைவி, தாய் அண்ணன் மகன் ஆகியோரை தாக்கியுள்ளார்.

திமுக நிர்வாகிகள் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு காயமடைந்த நிலையில் இருவரும் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதியாகியுள்ளனர். சாதிர் வீட்டுக்குச் சென்று தாக்கிய இஞ்சி இஸ்மாயில் அரசு மருத்துவமனையில் மல்லாக்காக படுத்துக்கொண்டு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர் "என்னை சாதி கீழே தள்ளிவிட்டு நெஞ்சில் ஏறி மிதித்து வெட்டிக் கொள்வேன், குத்திக் கொள்வேன் என மிரட்டினார். ஏற்கனவே எனக்கு ஆஞ்சியோ செய்யப்பட்ட நிலையில் நெஞ்சில் ஏறி மிதித்துள்ளார். எனது மகன்களையும் தகாத வார்த்தைகளால் திட்டினார்" சாதிர் மீது குற்றம் சாட்டினார். திமுக நிர்வாகிகள் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதியாகியுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரம் தென்காசி திமுக நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
DMK officials attacking each other and admit in tenkasi hospital