இது ஜனநாயக நாடு - திமுக எம்.பி அழகிரியின் அரசியல் பிரவேசம் குறித்து பேச்சு..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. இதனிடையே கருணாநிதியின் மூத்த மகன் மு.க அழகிரி மீண்டும் அரசியலில் இறங்கப் போவதாக அறிவித்ததை அடுத்து, அவரால் திமுகவுக்கு பாதிப்பு ஏற்படுமோ என்ற கலக்கத்தில் திமுகவினர் உள்ளனர்.

மு.க அழகிரியை எப்படியாவது பாஜகவில் இணைக்க வேண்டும் என பாஜக தரப்பினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனிடையே, மு.க அழகிரி பாஜகவில் இணைந்தால் வரவேற்போம் என பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் கூறினார். இது திமுகவினருக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " இந்திய ஜனநாயக நாட்டில் யாரும் அரசியலுக்கு வரலாம். மு.க. அழகிரியின் செயல்பாடு, அவரது தனிப்பட்ட முடிவு " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MP Kanimozhi Statement about MK Alagiri Politics Decision


கருத்துக் கணிப்பு

சசிகலா வருகை அதிமுக-வை பாதிக்குமா?!Advertisement

கருத்துக் கணிப்பு

சசிகலா வருகை அதிமுக-வை பாதிக்குமா?!
Seithipunal