24 மணி நேரத்தில் 8 கொலைகள்: தமிழக சட்டம்-ஒழுங்கு குறித்து தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி ஆவேச கேள்வி...!
8 murders 24 hours DMK Deputy General Secretary Kanimozhi passionate question about law and order Tamil Nadu
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8 கொலைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளதை சுட்டிக்காட்டி, மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,"கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழகத்தில் 8 கொலைகள் நடைபெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டது என்பதற்கு இந்தக் கொலைச் சம்பவங்களே சாட்சியாக உள்ளன.தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொலைச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வதாகத் தெரிகிறது.
மாநிலத்தின் வளர்ச்சி விகிதம் உயரும் என்ற நம்பிக்கையில் வாக்களித்த மக்களுக்கு, தினந்தோறும் குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் தவெக அரசு தண்டனை அளித்துக்கொண்டிருக்கிறது.
மக்களின் பாதுகாப்பு நாளுக்கு நாள் கேள்விக்குறியாகி வரும் நிலையில், தமிழக அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது? மாநில காவல்துறை உரிய முறையில் செயல்படுகிறதா? அல்லது முதல்-அமைச்சரைப் போல அதுவும் ஓய்வில் இருக்கிறதா?” என்று கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.இவ்வாறு அவரது பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
8 murders 24 hours DMK Deputy General Secretary Kanimozhi passionate question about law and order Tamil Nadu