செந்தில்பாலாஜியிடம் நேரில் விசாரணை நடத்தும் சென்னை முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி!
DMK Minister Senthilbalaji Arrested case issue
திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து செல்லும் வழியில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது.
இதனையடுத்து, அவரை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அமலாக்கத்துறையினர் அனுமதித்தனர். அங்கு அவருக்கு ஆஞ்சியோ சோதனை நடத்தப்பட்டதில், அவரின் இதயத்துக்கு செல்லக்கூடிய ரத்தக் குழாய்களில் மூன்று இடங்களில் அடைப்பு இருப்பதால், அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

இதற்கிடையே அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த மனுவை இன்றே விசாரணை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், சென்னை முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி அவர்கள் இன்னும் சற்று நேரத்தில், ஓமந்தூரார் மருத்துவமனைக்குச் சென்று செந்தில் பாலாஜியிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளார்.

நீதிபதி மருத்துவமனை வர உள்ளதால் திமுக தரப்பு வழக்கறிஞர்கள் தற்போது மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.
English Summary
DMK Minister Senthilbalaji Arrested case issue