ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல் என்பது கற்பனை! அமலாக்கத்துறைக்கு திமுக அமைச்சர் கண்டனம்!
DMK Minister Muthusamy Condemn ED Raid
டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் விசாகன் வீட்டில் 2-வது நாளாக சோதனை நடத்தி வரும் அமலாக்கத்துறை அதிகாரிகள், அவரை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வரும் நிலையில், தமிழ்நாடு அரசு ஊழியர்களை துன்புறுத்தும் அமலாக்கத்துறைக்கு, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் அறிக்கையில், "அரசியல் உள்நோக்கத்தோடு அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வருகிறது.
உச்சநீதிமன்ற விதிமுறைகளை மீறி அமலாக்கத்துறை மேற்கொண்டு வரும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைக்கு கண்டனம். அ.தி.மு.க. ஆட்சியில் விஜிலென்ஸ் பதிவு செய்த வழக்குகளை அடிப்படையாக கொண்டு அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
அ.தி.மு.க. ஆட்சியில் பதிந்த வழக்கை தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற முறைகேடு போல் சித்தரிப்பதற்காக ரெய்டு. எந்த ஆதாரமும் கிடைக்காததால் ரூ.1,000 கோடி ஊழல் என கற்பனை செய்தியை அமலாக்கத்துறை வெளியிட்டது.
வெளியிட்ட தவறான அறிக்கையை நியாயப்படுத்த ED டாஸ்மாக் நிறுவன ஊழியர்களை தொடர்ந்து துன்புறுத்துகிறது. அமலாக்கத்துறை நடவடிக்கைகளுக்கு எதிராக அனைத்து சட்டபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு, நமது அலுவலர்களுடன் அரசு எப்போது துணை நிற்கும்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
DMK Minister Muthusamy Condemn ED Raid