பாகிஸ்தான் அனுப்பிய 600 ட்ரோன்களை வீழ்த்திய இந்தியா: ராணுவம் அறிவிப்பு..!
India shoots down 600 drones sent by Pakistan Army announces
காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இதனால் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாத முகாம்களை மட்டும் குறிவைத்து 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
ஆனால், பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவின் ராணுவ நிலைகள் மற்றும் பொது மக்கள் வசிக்கும் பகுதிகளை நோக்கி ட்ரோன்களை அனுப்பி தாக்க முயன்றது. அப்போது இந்திய ராணுவத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பாகிஸ்தானின் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது.

அதாவது, பாகிஸ்தான் அனுப்பிய 600-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை இந்திய ராணுவம் அழித்துள்ளதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் ட்ரோன்கள் ஊடுருவ தொடங்கியதுமே, இந்திய பாதுகாப்புப் படையினர் ,வான் பாதுகாப்பு அமைப்பை செயல்படுத்தியதுடன், எல்லைக் கட்டுப்பாடு கோடு மற்றும் சர்வதேச எல்லையில் பகுதியில் ஆயிரத்திற்கும் விமான எதிர்ப்பு துப்பாக்கிகள் மூலம் பாகிஸ்தானின் ட்ரோன்களை வீழ்த்தப்பட்டன.
மேலும், பாதுகாப்புக்கு கூடுதல் சேர்க்கும் வகையில், குறுகிய தூரத்தில், தரையில் இருந்து, வானில் உள்ள இலக்குகளை தாக்கும் ஏவுகணைகளும் பாகிஸ்தானுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டன. அதில், ஆகாஷ் டிர் அமைப்பும் பாதுகாப்பு பணியில் இருந்தது. அத்துடன், சுவீடனில் தயாரிக்கப்பட்ட எல் 20 வான் பாதுகாப்பு துப்பாக்கிகள், ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஜூயு -23 எம்எம் துப்பாக்கிகள், ஷில்கா துப்பாக்கி அமைப்பும் பாகிஸ்தான் டுரோன்களை வீழ்த்த பயன்படுத்தப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
English Summary
India shoots down 600 drones sent by Pakistan Army announces