சென்னை தரமணி - திருவான்மியூர் சாலையில் திடீர் பள்ளம்: விபத்தில் சிக்கிய கார்: வாகன ஓட்டுனர்கள் அதிர்ச்சி..!
Car accident after getting stuck in a sudden ditch on Chennai Taramani and Thiruvanmiyur road
சென்னையில் 2 நாட்களாக மழை விட்டு விட்டு பெய்துவருகிறது. இந்நிலையில், சென்னை தரமணியில் இருந்து திருவான்மியூர் செல்லும் சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டு, கார் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
மெட்ரோ ரெயில் பணியால் இந்த விபத்து ஏற்பட்டிருக்க கூடும் என கூறப்பட்டது. ஆனால், விபத்து நடந்த இடத்தில் இருந்து 300 மீட்டர் தொலைவில்தான் மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வருகின்றன. இதனால், இந்த விபத்திற்கும், மெட்ரோ ரெயில் பணிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்ட இடத்திற்கு அருகே கழிவுநீர் கால்வாய் அமைப்பு உள்ளது. ஆக, ரெயில் சுரங்க பணிகளுக்கும் இந்த விபத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்த விபத்து தொடர்பில் போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் சாலையில் செல்லும் வாகன ஓட்டுனர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
English Summary
Car accident after getting stuck in a sudden ditch on Chennai Taramani and Thiruvanmiyur road