உக்ரைன்-ரஷ்யா போர் நிறுத்தம்: புடின் மற்றும் ஜெலன்ஸ்கியுடன் பேசி, மத்தியஸ்தம் செய்வேன்; டிரம்ப்..!
Trump says he will talk to Putin and Zelensky about Ukraine and Russia ceasefire and mediate
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முறையாக நேரடி அமைதிப் பேச்சுவார்த்தை நடந்தது. இந்நிலையில், உக்ரைன் போர் குறித்து வரும் திங்கட்கிழமை ரஷ்ய அதிபர் புடினுடன் தொலைபேசியில் பேசுவேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்..
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திங்கட் கிழமை காலை 10:00 மணிக்கு, ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புடினிடம் தொலைபேசி மூலம் பேசுவேன். அப்போது, வாரத்திற்கு சராசரியாக 5000-க்கும் மேற்பட்ட ரஷ்ய மற்றும் உக்ரைன் வீரர்களைக் கொல்லும், போரை நிறுத்துவது குறித்து பேசுவேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், உக்ரைனின் அதிபர் ஜெலன்ஸ்கியிடமும்,தான் பேசுவேன் என்றும், இது ஒரு முக்கியமான நாளாக இருக்கும் என்று நநம்புவதாகவும், இதன் மூலம் ஒரு போர் நிறுத்தம் ஏற்படும்.அத்துடன், இந்த வன்முறை முடிவுக்கு வரும் என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.
அதாவது, ரஷ்யா-உக்ரைன், இடையே மூன்று ஆண்டுகளில் முதல் முறையாக நேரடி அமைதிப் பேச்சுவார்த்தை நடத்திய ஒரு நாளுக்கு பிறகு அமெரிக்க அதிபர் டிரம்ப் மத்தியஸ்தம் செய்வேன் என கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Trump says he will talk to Putin and Zelensky about Ukraine and Russia ceasefire and mediate