அவசரகால தேவை: ரூ.40 ஆயிரம் கோடிக்கு ஆயுதங்கள், வெடிமருந்துகளை வாங்க மத்திய அரசு ஒப்புதல்..!
Central government approves purchase of arms and ammunition worth Rs 40 thousand crore
ரூ.40 ஆயிரம் கோடி அளவில் ஆயுத படையினருக்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் வாங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அவசர கால கொள்முதல் அதிகாரத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது:- அவசரகால கொள்முதல் அதிகாரத்தின் கீழ் பாதுகாப்பு படையினருக்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் வாங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் கீழ் கண்காணிப்பு ட்ரோன்கள், தற்கொலை ட்ரோன்கள், பீரங்கிகளுக்கு தேவையான வெடிமருந்துகள், ராக்கெட்கள், வான் பாதுகாப்பு மற்றும் ஏவுகணைகள் உள்ளிட்டவை வாங்கப்பட உள்ளன. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இவை வாங்கப்பட உள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள இலக்குகளை தாக்க பயன்படுத்தப்பட்ட ரேம்பேஜ் ஏவுகணைகள் வாங்கப்பட உள்ளதாகவும், முன்பு இந்த ஏவுகணைகளுக்காக ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில், தற்போது உள்நாட்டிலேயே தயாரிக்கப்படவுள்ளது என்றும், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகளை நேரில் கண்காணித்த ஹெரோன் மார்க் 02 டுரோன்களும் வாங்கப்படவு ள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன், டிரோன்களை கண்டுபிடிப்பதற்கான ரேடார்கள் தொடர்பான ஒப்பந்தத்தை பொதுத்துறை நிறுவனமான பெல்-க்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், உள்நாட்டில் டிரோன் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஐந்தாண்டுகளில், ஐந்தாவது முறையாக அவசரகால கொள்முதல் அதிகாரத்தை பயன்படுத்தி ஆயுதங்கள் வாங்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Central government approves purchase of arms and ammunition worth Rs 40 thousand crore