மழையால் ரத்து செய்யப்பட்ட ஆர்சிபி- கேகேஆர் போட்டி: ஐ.பி.எல். தொடரில் இருந்து வெளியேறிய நடப்பு சாம்பியன்..!
match cancelled due to rain The defending champions are out of the IPL series
கடந்த மாதம் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் பகுதியில் திடீர் பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப்பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் நாட்டை கொந்தளிப்பில் ஆழ்த்தியது. இந்த கொடூர சம்பவத்தினை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் அதிகரித்தது. அதன் காரணமாக காரணமாக கடந்த 08-ஆம் தேதி பஞ்சாபில் நடந்த பஞ்சாபி மற்றும் டெல்லி அணிகளுக்கிடையிலான ஐபிஎல் போட்டி பாகிஸ்தானின் ட்ரான் தாக்குதல் காரணமாக பாதுகாப்பு கருதி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதன்பின், ஒரு வாரம் நடப்பு போட்டிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு, ஒரு வாரம் தள்ளி வைப்பட்டது.

பி.சி.சி.ஐ. மற்றும் ஐ.பி.எல் நிர்வாகத்தின் கலந்தாலோசனையின் படி, மே 17-ஆம் தேதி போட்டிகள் மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி மற்றும் கேகேஆர் இடையிலான போட்டி நடைபெற இருந்தது.
ஆனால், பெங்களூருவில் மழை பெய்து வருவதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. இருப்பினும் மழை விட்டதும் ஓவர்கள் குறைத்து போட்டி நடைபெறும் எனவும் கூறப்பட்டது. ஆனால், இடைவிடாத மழை காரணமாக போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் பெங்களூரு அணி மற்றும் கொல்கத்தாஅணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

இதையடுத்து, நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 12 போட்டிகள் விளையாடி அதில் 05 வெற்றிகளை பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் கிடைத்த ஒரு புள்ளி மூலம் 11 புள்ளிகளை மாத்திரம் பெற்றுள்ளது. பெங்களூரு அணி 12 போட்டிகளில் 08 ஆட்டத்தில் வேற்று பெற்றுள்ளது. இன்று கிடைத்த ஒரு புள்ளியுடன் 17 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது.
இதன் காரணமாக ஏற்கனவே சென்னை, ராஜஸ்தான், ஐதராபாத் அணிகள் தொடரில் இருந்து வெளியேறியுள்ள நிலையில், நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் வெளியேறியுள்ளது.
English Summary
match cancelled due to rain The defending champions are out of the IPL series