13 வயது சிறுமி 02 பேருடன் தொடர்பு: எதிர்ப்பு தெரிவித்த வளர்ப்பு தாய்க்கு நேர்ந்த கொடுமை; இன்ஸ்டாவால் அம்பலமான உண்மை..!
The cruelty that befell the mother raised her daughter from everything found on the road The truth exposed by Instagram
ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் 14 ஆண்டுகளுக்கு முன் பிறந்து 03 நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று சாலையில் கிடந்ததை பார்த்த ராஜலட்சுமி மற்றும் அவருடைய கணவர் தூக்கி வந்துள்ளனர். குறித்த தம்பதிக்கு குழந்தை இல்லாத காரணத்தால் அனாதையாக கிடைத்த குழந்தையை தங்களுடைய குழந்தையாக வளர்த்து வந்துள்ளனர்.
இதற்கிடையே ஓராண்டில்ராஜலட்சுமி கணவர் இறந்து விட்டார். இதனால் அந்த பெண் குழந்தையை ஒற்றை ஆளாக ராஜலட்சுமி வளர்த்து வந்துள்ளார். அத்துடன் அவள் நன்றாக படிக்க வேண்டுமென விரும்பி பரலாகேமுண்டி பகுதிக்கு ராஜலட்சுமி இடம் பெயர்ந்து, வாடகை வீட்டில் தங்கியுள்ளார். குறித்த சிறுமியை கேந்திரிய வித்யாலயாவில் சேர்த்து படிக்க வைத்துள்ளார். தற்போது 13 வயதுடைய அந்த சிறுமி 08-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

பள்ளிக்கூடம் சென்று வந்த அந்த சிறுமிக்கு நாளடைவில் அந்த தன்னை விட அதிக வயதுடைய கோவில் பூசாரியான ராத் (21) மற்றும் தினேஷ் சாகு (20) ஆகியோருடன் தொடர்பு ஏற்பட்ட்டுள்ளது. இதற்கு ராஜலட்சுமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், ராஜலட்சுமிக்கும், சிறுமிக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ராஜலட்சுமியை கொலை செய்யும்படி சிறுமியை, கோவில் பூசாரியான ராத் தூண்டியுள்ளதோடு, அவரை கொன்று விட்டால் எதிர்ப்பு எதுவுமின்றி தங்களுக்குள் உறவை தொடரலாம் என்றும் தங்க நகை உள்ளிட்ட அணைத்து சொத்துகளை அடையலாம் என்றும் ஆசை காட்டியுள்ளார்.

அதன் படி, கடந்த ஏப்ரல் 29-ந்தேதி இரவு, தன்னை வளர்த்த தாய் என்றும் பாரெல்லாம் 13 வயது சிறுமி அவரை கொல்ல சதித்திட்டம் தீட்டியுள்ளார். அதற்காக ராஜலட்சுமிக்கு தூக்க மருந்துகளை சிறுமி கொடுத்துள்ளார். அதனால் அவர் சுயநினைவு இழந்துள்ளார். பின்னர் ராத் மற்றும் சாகுவை சிறுமி அழைத்து, 03 பேரும் சேர்ந்து ராஜலட்சுமியை தலையணைகளால் அழுத்தி கொலை செய்துள்ளனர்.
பின்னர் அவரை மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர். ஆனால் ராஜலட்சுமி வழியிலேயே உயிரிழந்து விட்டார். ஆனால் அந்த சிறுமி குடும்பத்தினரிடமும், மருத்துவமனை ஊழியர்களிடமும் ராஜலட்சுமிக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக கூறியுள்ளார். ஏற்கனவே ராஜலட்சுமிக்கு இதய பாதிப்பு இருந்துள்ளதால், இதனால், அதுபற்றி கேள்விகள் எதுவும் எழவில்லை.

இந்நிலையில், ராஜலட்சுமி இறந்து 02 வாரம் கழிந்துள்ளது. சிறுமி விட்டு சென்ற மொபைல் போன் ராஜலட்சுமியின் சகோதரர் சிபா பிரசாத் மிஷ்ரா கைக்கு கிடைத்துள்ளது. அதனை அவர் ஆய்வு செய்ததில், இன்ஸ்டாகிராமில் சிறுமி மற்றும் ராத் இருவரும்பேசியுள்ளதை பார்த்துள்ளார். அதில் கொலை திட்டம் பற்றி விரிவாக இருவரும் சாட் செய்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
உடனடியாக காவல்நிலையத்துக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில், சிறுமி உள்பட 03 பேர் கைது செய்யப்பட்டனர். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. தவறான சகவாசத்தில் வளர்ப்பு தாயை கொலை செய்து சிறுமி சிறைக்கு சென்ற சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
English Summary
The cruelty that befell the mother raised her daughter from everything found on the road The truth exposed by Instagram