ஆண்கள் காசு கொடுத்து போறாங்க... பெண்கள் ஓசில போறீங்க.. திமுக அமைச்சரின் சர்ச்சை பேச்சு..!!
DMK minister controversially talked about free bus for women
திமுக அரசு ஆட்சி அமைந்து இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் தமிழக முழுவதும் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்ற திமுக அரசின் இரண்டு ஆண்டு கால சாதனை விளக்கப் பொதுக் கூட்டத்தில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்பொழுது அவர் திமுக பெண் தொண்டர்களை பார்த்து அரசு பேருந்துகளில் காசு கொடுத்து போறீங்களா..? ஓசியில் போறீங்களா..? என கேட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பொதுக்கூட்ட மேடையில் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பேசியதாவது "நாங்க ஆட்சிக்கு வந்தால் மகளிர் இலவசமாக பேருந்தில் பயணம் செய்யலாம் என வாக்குறுதி அளித்தோம். இன்று இலவசமாக போறீர்களா? காசு கொடுத்து போறீங்களா? ஆம்பளைங்க எல்லாம் காசு கொடுத்து போறாங்க. பொம்பளைங்க எல்லாம் ஓசியில் போறீங்க. ஆண்கள் காசு கொடுத்து போனால் பெண்கள் காசு கொடுக்காமல் போறீங்க. இதுதான் இந்த ஆட்சியில் இரண்டு ஆண்டு கால சாதனை.
அடுத்து மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் முதலமைச்சர் தருவார் என உங்களுக்கு நம்பிக்கை இருக்கா இல்லையா.? நகை கடன் தள்ளுபடி ஆகியிருக்கா இல்லையா..? ஒகேனக்கல் வழியாக கடலில் வீணாக கலக்கும் நீரை கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தர்மபுரி மாவட்ட பாசனத்திற்கு கொண்டு செல்வதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் அந்த திட்டம் நிறைவேற்றப்படும் என்பதை உறுதி அளிக்கிறேன்" என பொதுக் கூட்ட மேடையில் பேசியுள்ளார். ஏற்கனவே அமைச்சர் பொன்முடி பெண்களுக்கான இலவச பேருந்து ஓசி என பேசிய நிலையில் தற்போது அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ஓசி பேருந்து பயணம் என பேசி இருப்பது மீண்டும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
English Summary
DMK minister controversially talked about free bus for women