தமிழகம் வரும் தேசிய தலைவர்கள்! மெகா கூட்டணிக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு! அதிரடி தீர்மானங்கள்! - Seithipunal
Seithipunal


சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தி.மு.க.தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைப்பெற்றது

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் : "அன்னை தமிழ்நாட்டிற்கும்- இந்திய திருநாட்டிற்கும் தலைவர் கலைஞர் ஆற்றிய பங்களிப்பின் பசுமையான நினைவுச் சின்னங்களாக “கலைஞர் கோட்டம், அருங்காட்சியகத்தை" அகில இந்திய தலைவர்கள் திறந்து வைக்க இருக்கிறார்கள். 

தொடக்க விழா மாநாட்டில், காலையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்களும், மாலையில் அகில இந்திய தலைவர்களும் உரையாற்ற இருக்கிறார்கள். 

வரும் சூன் 3 ஆம் நாள் தொடங்கி அடுத்த ஆண்டு சூன் - 3 வரை ஓராண்டு காலம் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை தொண்டர்களின் இல்ல விழாவாக - மக்கள் விழாவாக - கொள்கை விழாவாக - வெற்றி விழாவாக- இந்தியத் திருநாடே திரும்பிப் பார்க்கும் வகையில் மிகச் சிறப்பாக கொண்டாடுவது என திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தீர்மானிக்கிறது." என்ற இந்த தீர்மானம் வரும் 2024 தேர்தலுக்கு முக்கிய திருப்பமாக அமையும் என்றும் சொல்லப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK meet impartment announce 2023


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->