பண்டிகை கால ஸ்பெஷல்...! முகம் தங்கம் போல ஜொலிக்க...! - வீட்டில் இருக்கும் இந்த ஒரு பழம் போதும்...!
Festive special Make your face shine like gold This one fruit at home enough
பண்டிகை நாட்கள், குடும்ப விழாக்கள், சுபநிகழ்ச்சிகள் அல்லது திடீரென ஏற்படும் பார்ட்டிகள் போன்ற சமயங்களில் உடனடியாக முகத்தை பொலிவாக மாற்ற வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். ஆனால் அந்த நேரத்தில் பார்லருக்குச் சென்று ஃபேஷியல் செய்ய நேரம் கிடைப்பது அரிது.அப்படிப்பட்ட அவசர தருணங்களில், உங்கள் சமையலறையில் இருக்கும் ஒரு சாதாரண பப்பாளி பழமே முகத்திற்கு அற்புதமான பொலிவை தரக்கூடிய இயற்கை அழகு ரகசியமாக மாறிவிடும்.வெறும் 15 நிமிடங்களில் சருமத்தை புத்துணர்ச்சியுடன் மிளிரச் செய்யும் சக்தி பப்பாளிக்குள்ளது. இதில் நிறைந்துள்ள ‘பப்பாயின்’ என்சைம்கள் மற்றும் வைட்டமின் ஏ, சி போன்ற சத்துக்கள், சருமத்தில் படிந்துள்ள இறந்த செல்களை நீக்கி முகத்திற்கு உடனடி பிரகாசத்தை வழங்குகின்றன.

பப்பாளி – தேன் பொலிவு பேக்
வறண்ட, சோர்வடைந்த மற்றும் பொலிவிழந்த சருமத்திற்கு உடனடி ஈரப்பதமும் ஒளிவீச்சும் தர இந்த பேக் சிறந்த தேர்வாக இருக்கும்.நன்றாக பழுத்த பப்பாளி துண்டுகளை எடுத்து மென்மையாக மசித்துக் கொள்ளுங்கள். அதனுடன் ஒரு ஸ்பூன் சுத்தமான தேன் மற்றும் ஒரு ஸ்பூன் காய்ச்சாத பால் சேர்த்து நன்றாக கலக்கவும்.இந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் சமமாகப் பூசி 15 முதல் 20 நிமிடங்கள் வரை அப்படியே விடுங்கள். பின்னர் குளிர்ந்த நீரால் மெதுவாக கழுவுங்கள்.தேன் சருமத்திற்கு ஆழமான ஈரப்பதத்தை அளிக்க, பப்பாளி முகத்திற்கு உடனடி இயற்கை பிரகாசத்தை கொடுக்கும்.
பப்பாளி – அரிசி மாவு ஸ்க்ரப்
முகத்தில் படிந்த அழுக்கு, எண்ணெய் மற்றும் கரும்புள்ளிகளை அகற்றி சருமத்தை மென்மையாக்க இந்த இயற்கை ஸ்க்ரப் உதவும்.2 ஸ்பூன் பப்பாளி பழக்கூழுடன் ஒரு ஸ்பூன் நைசான அரிசி மாவை சேர்த்து கலக்கவும்.இந்த கலவையை முகத்தில் தடவி, குறிப்பாக மூக்கு மற்றும் கன்னப்பகுதிகளில் வட்ட வடிவில் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.சுமார் 5 நிமிடங்கள் இதை செய்த பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவினால், முகம் பட்டுப் போல மென்மையாக மாறி பளிச்சென்று ஜொலிக்கும்.
கவனிக்க வேண்டியவை
ஃபேஸ் பேக் பயன்படுத்துவதற்கு முன் முகத்தை நன்றாக சுத்தம் செய்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.எப்போதும் நன்கு பழுத்த பப்பாளி பழத்தை மட்டுமே பயன்படுத்துங்கள். காய் அல்லது அரைபழுத்த பப்பாளி சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தக்கூடும்.உணர்திறன் அதிகமான சருமம் கொண்டவர்கள் அல்லது அலர்ஜி பிரச்சினை உள்ளவர்கள், இந்த கலவையை முதலில் காதின் பின்புறம் அல்லது கையின் உள்ள்புறத்தில் சிறிதளவு தடவி பரிசோதித்த பிறகே முகத்தில் பயன்படுத்துவது நல்லது.இயற்கை பொருட்களால் கிடைக்கும் அழகு நீடித்ததும் பாதுகாப்பானதும் ஆகும். ஆகவே அவசர நேரங்களில் ரசாயனங்களுக்குப் பதிலாக பப்பாளி போன்ற இயற்கை தீர்வுகளை தேர்வு செய்யுங்கள்.
English Summary
Festive special Make your face shine like gold This one fruit at home enough