வகுப்பறையா...? பிறந்தநாள் விழாவா...? பள்ளி நேரத்தில் மாணவர்களை அழைத்ததற்கு வானதி சீனிவாசன் கடும் கண்டனம்...! - Seithipunal
Seithipunal


பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், பள்ளி மாணவர்கள் அரசியல் நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக வெளியாகிய தகவலை கடுமையாக விமர்சித்து தனது எக்ஸ் தள பதிவில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,"காஞ்சிபுரம் அருகே உள்ள ஜெ.ஜெ. நகர் ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்கள், பள்ளி நேரத்திலேயே அருகில் தவெக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முதல்-அமைச்சர் பிறந்தநாள் விழா நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.

பள்ளிகளில் ரீல்ஸ், அரசு நிகழ்ச்சிகளில் நடனங்கள், உச்சகட்டமாக பள்ளி மாணவர்களிடம் தவெக தலைவர் விஜய் பாடல்களை ஒலிக்கச் செய்வது இப்படி கல்விக் கூடங்களையும் அரசு நிகழ்ச்சிகளையும் மெல்ல மெல்ல மினி ஷூட்டிங் ஸ்பாட்டுகளாக மாற்றி அரசியல் செய்வதுதான் தவெக-வின் புதிய அரசியல் அணுகுமுறையா?

பேட்டிகளில் திறமையாக பதிலளித்து சூழலை சமாளிக்கும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், இத்தகைய செயல்பாடுகளுக்கு என்ன விளக்கம் அளிக்கப் போகிறார் என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது.பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது போன்ற இரட்டை நிலைப்பாடுதான் தவெக அரசின் செயல்பாடுகளில் வெளிப்படுகிறது.

இதை இன்னும் வெளிப்படையாகச் சொல்வதானால், திரைப்பட வசன பாணியில் “அவரே பிரச்சினையை உருவாக்குவாராம்... அவரே அதை சரி செய்வாராம்...!” என்ற நிலையே தற்போது உருவாகியுள்ளது.

கட்சி நிர்வாகிகளிடம் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தப்பட்டதாக கூறப்பட்ட பின்னரும், இதேபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது எந்த வகையில் நியாயம்?பள்ளி மாணவர்களை குறிவைத்து அரசியல் ஆதாயம் தேடும் இந்த போக்கை உடனடியாக கைவிட வேண்டும்.

மேலும், இதுபோன்ற செயல்கள் இனி நடைபெறாத வகையில் தவெக தலைவர் விஜய் தனது கட்சி நிர்வாகிகளுக்கு கடுமையான அறிவுறுத்தலை வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Classroom Birthday party Vanathi Srinivasan strongly condemned inviting students during school hours


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




சினிமா

Seithipunal
--> -->