அப்படியே தூங்கிடுவீங்களா...? மேக்கப் ரிமூவ் செய்யாமல் தூங்குபவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து...! - Seithipunal
Seithipunal


பண்டிகைகள், குடும்ப விழாக்கள், திருமண நிகழ்ச்சிகள் அல்லது நண்பர்கள் பார்ட்டி என எந்த சிறப்பு நிகழ்வாக இருந்தாலும், அலங்காரமாக மேக்கப் செய்து செல்வது இன்று பலரின் வழக்கமாகிவிட்டது. ஆனால் இரவு தாமதமாக வீடு திரும்பியதும் பெரும்பாலோர் செய்யும் மிகப்பெரிய தவறு, மேக்கப்பை அகற்றாமல் அப்படியே தூங்கிவிடுவதுதான்.“ரொம்ப சோர்வா இருக்கு… காலையில பார்த்துக்கலாம்” என்ற ஒரு சிறிய அலட்சியம் கூட உங்கள் சருமத்திற்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

நாள் முழுவதும் காற்றில் கலந்திருக்கும் தூசி, மாசு, புகை மற்றும் முகத்தில் சுரக்கும் இயற்கை எண்ணெய் ஆகியவை மேக்கப் அடுக்குகளுடன் கலந்து சருமத்தில் படிந்துவிடும். இதை அகற்றாமல் தூங்கும்போது, சருமத் துளைகள் அடைபட்டு தோல் இயல்பாக சுவாசிக்கும் செயல்முறை பாதிக்கப்படும்.

இதன் விளைவாக முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள் மற்றும் எண்ணெய் சுரப்பு பிரச்சினைகள் அதிகரிக்கலாம். மறுநாளே முகம் பொலிவிழந்து சோர்வாக தெரியும்.கண்களில் இருக்கும் காஜல், ஐலைனர், மஸ்காரா போன்றவற்றுடன் தூங்குவது கண் எரிச்சல், சிவப்பு மற்றும் அலர்ஜி போன்ற பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும்.

அதேபோல், உதட்டில் நீண்ட நேரம் இருக்கும் லிப்ஸ்டிக் மற்றும் கெமிக்கல் பொருட்கள் உதட்டின் இயற்கை ஈரப்பதத்தை உறிஞ்சி, உதட்டை வறண்டதாகவும் கருமையாகவும் மாற்றக்கூடும்.வெறும் சோப்பு அல்லது சாதாரண முகக்கழுவி மட்டும் பயன்படுத்தினால் மேக்கப் முழுமையாக நீங்காது.

குறிப்பாக நீர்ப்புகா மேக்கப் பொருட்கள் சருமத்தில் ஒட்டிக்கொண்டே இருக்கும்.எனவே முதலில் தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் அல்லது மைசெல்லார் வாட்டர் கொண்டு பஞ்சின் உதவியால் மேக்கப்பை மெதுவாக துடைத்து அகற்ற வேண்டும்.அதன்பிறகு உங்கள் சருமத்திற்கேற்ற முகக்கழுவியை பயன்படுத்தி வெதுவெதுப்பான நீரில் முகத்தை நன்றாக கழுவ வேண்டும். இதுவே சருமத்தை ஆழமாக சுத்தப்படுத்தும்.

முகத்தை கழுவிய பிறகும் சருமத்திற்கு கூடுதல் பராமரிப்பு அவசியம். மேக்கப்பை அகற்றிய பின் சருமம் சற்று வறட்சியடைய வாய்ப்பு உள்ளது.அதனால் சருமத்திற்கு ஊட்டச்சத்து அளிக்கும் ஃபேஸ்மாஸ்க் அல்லது ஃபேஸ்பேக் பயன்படுத்துவது நல்லது.

இது முக வீக்கத்தை குறைத்து, சருமத்திற்கு புத்துணர்ச்சியையும் ஆழமான ஈரப்பதத்தையும் அளிக்கும்.மாஸ்க் நீக்கிய பிறகு, ஒரு நல்ல மாய்ஸ்ச்சரைசர் அல்லது அலோவேரா ஜெல் தடவ மறக்காதீர்கள். இது சருமத்தை மென்மையாகவும் குளிர்ச்சியாகவும் வைத்திருக்கும்.அழகான மேக்கப் முக்கியம் தான்… ஆனால் அதைவிட முக்கியமானது ஆரோக்கியமான சருமம். எனவே எந்த சூழலிலும் மேக்கப்பை அகற்றாமல் தூங்காதீர்கள்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Will you sleep like that danger that awaits those who sleep without removing their makeup


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




சினிமா

Seithipunal
--> -->