''இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளருக்காக முதல்வர் விஜய் பிரச்சாரம் செய்வார்''; மாணிக்கம் தாகூர் அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


தவெக ஆதரவு கட்சிகளின் 02-வது ஆலோசனைக் கூட்டம், பனையூரில் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு தவெக தலைவரும், முதல்வருமான விஜய் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், மதிமுக ஆகிய கட்சிகள் பங்கேற்றன. இந்த கூட்டத்தில் இடதுசாரிகள் காட்சிகள் இடம்பெறவில்லை.

இந்த ஆலோசனைக்குப் பின்னர் தவெக தலைமையிலான கூட்டணிக்கு 'மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி' என பெயர் சூட்டப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது;

''இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் எங்கள் கூட்டணிக்கு 'மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி'என பெயரிடப்பட்டது. இது மிகவும் பலமான கூட்டணியாக இருக்கும் என்றும், நடைபெறவுள்ள 02 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கு 'மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி'யின் வேட்பாளர்கள் நாளை அறிவிக்கப்படுவார்கள் என்று அறிவித்துள்ளார்.

அத்துடன், சமூக நீதி, மதசார்பின்மையின் அடிப்படையில் தமிழகத்தின் நன்மைக்காக இந்தக் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதாகவும், நேர்மையான ஆட்சி தமிழகத்தில் தொடர நாங்கள் இக்கூட்டணிக்கு ஆதரவு தருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

அதாவது, 'மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி'யின் தலைவராக முதல்வர் விஜய்யை நாங்கள் ஒருமனதாக ஏற்றுக்கொண்டோம். அவரின் ஒருங்கிணைப்பில் இந்தக் கூட்டணியை உருவாக்கியுள்ளோம். இந்தக் கூட்டணி விஜய் தலைமையில் தமிழகத்திலும், புதுச்சேரியிலும் செயல்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

'மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி' என்பது இண்டியா கூட்டணியின் ஒரு பகுதி என்றும், இண்டியா கூட்டணி மக்களவைத் தேர்தலுக்காக அமைக்கப்பட்ட கூட்டணி என்று தெரிவித்துள்ளார். அத்துடன், வரும் 2029-இல் மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்படும் போது இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்றும், அப்போது இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளருக்காக முதல்வர் விஜய் பிரச்சாரம் செய்வார் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான் என்றும், அதே நேரத்தில் இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளரை, அந்தக் கூட்டணி கட்சிகள் முடிவு செய்யும் என்றும், இண்டியா கூட்டணி வேட்பாளரை 'மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி' ஏற்றுக்கொள்ளும் என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Manickam Tagore announces that Chief Minister Vijay will campaign for the INDIA blocs Prime Ministerial candidate


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->