கூடலூரில் பரபரப்பு; புலியைப் பிடிப்பதற்காக வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை..!
A leopard caught in the cage set to capture a tiger in Gudalur
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஓவேலி பகுதியில் இரண்டு பேரை தாக்கிக் கொன்றதாகக் கூறப்படும் புலியைப் பிடிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதற்காக 13 இடங்களில் கூண்டுகள் அமைக்கப்பட்டு, கடந்த 20 நாட்களாக புலியைத் தேடும் பணிகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில், பாரம் அருகேயுள்ள அண்ணா நகர் பகுதியில் புலியைப் பிடிப்பதற்காக கூண்டு வைக்கப்பட்டுள்ளது. அதில், இன்று அதிகாலை சிறுத்தை ஒன்று சிக்கியுள்ளது. கூண்டில் சிக்கியிருந்த சிறுத்தையின் சத்தத்தைக் கேட்ட பொதுமக்கள், புலி சிக்கியிருப்பதாக நினைத்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வனத்துறையினர் விரைந்து வந்துள்ளனர். கூண்டில் சிக்கியது புலி அல்ல, சிறுத்தை என்பதை உறுதி செய்தனர். இதையடுத்து, சிறுத்தையை பாதுகாப்பாக மீட்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவித்துள்ளனர்.
அதாவது, இரண்டுப் பேரை தாக்கிய புலியைப் பிடிக்க வைக்கப்பட்ட கூண்டில் சிறுத்தை சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், மனிதர்களைக் கொன்றதாகக் கூறப்படும் புலியைப் பிடிக்கும் நடவடிக்கையை வனத்துறையினர் தொடர்ந்து தீவிரப்படுத்தியுள்ளனர். அப்பகுதியில் கண்காணிப்புப் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
English Summary
A leopard caught in the cage set to capture a tiger in Gudalur