சூர்யவன்ஷியின் ஸ்லெட்ஜிங்கை பொறுத்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்ட திலக் வர்மா; 99 ரன்னில் அவுட்டான போது நடந்தபோது சூரியவன்ஷி செய்த செயல் வைரல்..! - Seithipunal
Seithipunal


2026 துலீப் டிராபி தொடர் மண்டல அணிகளுக்கு இடையே பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கிழக்கு மண்டல மற்றும் தெற்கு மண்டல அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடி வருகின்றன.

கடந்த செப்டம்பர் 06-ஆம் தேதி சென்னை சிதம்பரம் மைதானத்தில் தொடங்கிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கிழக்கு மண்டல அணியின் கேப்டன் இஷான் கிஷானின் 270 ரன்கள் என்ற மிரட்டலான ஆட்டத்தால் 708 ரன்களை குவித்தது.

பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளம் என்பதால் தொடர்ந்து விளையாடிய தெற்கு மண்டல அணியும் பெரிய அளவில் ரன்களை குவிக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது ஷமி மற்றும் முகேஷ் குமார் இருவரும் தெற்கு மண்டல பேட்ஸ்மேன்களை அடுத்தடுத்து வெளியேற்றி ஷாக் கொடுத்தனர். ஒருபக்கம் விக்கெட் சரிந்த நிலையில், கேப்டன் திலக் வர்மா அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.

99 ரன்கள் அடித்திருந்த போது திலக் வர்மா துரதிருஷ்டவசமாக ஆட்டமிழந்தார். தெற்கு மண்டல அணி 336 ரன்கள் மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. தொடர்ந்து விளையாடி வரும் கிழக்கு மண்டல அணி 04-ஆம் நாள் ஆட்ட முடிவில் 05 விக்கெட்டுகள் இழப்புக்கு 212 ரன்கள் சேர்த்து 584 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. எப்படியும் இறுதிப்போட்டியை வென்று கோப்பை வெல்லும் முன்னிலையை கிழக்கு மண்டல அணி உள்ளது.

இறுதிப்போட்டி தொடங்கிய முதல் நாள் ஆட்டத்தின் போது தொடக்க வீரர்களாக களமிறங்கிய சூர்யவன்ஷி அபாரமாக ஆடினார். அப்போது விக்கெட் வீழ்த்த முடியாத விரக்தியில் இருந்த எதிரணி கேப்டன் திலக் வர்மா, சூர்யவன்ஷியிடம் வந்து சில வார்த்தைகளை பகிர்ந்துகொண்டார். அப்போது நீங்கள் எந்த பவுலர் அனுப்பினாலும் அடிப்பேன் என சூர்யவன்ஷி பதிலளித்தார். உடனே அணியின் சிறந்த பவுலரான சிராஜை திலக் வர்மா களமிறக்க, அவருடைய ஓவரில் சிக்சர் பவுண்டரிகள் என விரட்டிய சூர்யவன்ஷி திலக்கை பார்த்து சிரித்தார். இருந்தாலும் அரைசதமடிக்காமல் 44 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார்.

இந்நிலையில், போட்டியின் 04-ஆம் நாள் ஆட்டத்தில் 08 விக்கெட்டுகளை இழந்து தெற்கு மண்டல அணி தடுமாறி கொண்டிருந்தபோது, களத்தில் போராடிக்கொண்டிருந்த திலக்வரமாவை சூர்யவன்ஷி சீண்டிப்பார்த்துள்ளார். வேறு வழியில்லாமல் திலக் வர்மா சூர்யவன்ஷியின் ஸ்லெட்ஜிங்கை பொறுத்துக்கொள்ளும் நிலை ஏற்பட்டது. 

ஆனாலும், சிறப்பாக விளையாடிய திலக் வர்மா சதமடிக்கும் வாய்ப்பை இழந்து 99 ரன்னில் ஆட்டமிழந்தார். இஷான் கிஷனுடன் சேர்ந்து சூர்யவன்ஷியும் திலக் வர்மாவின் ஆட்டத்தை பாராட்டினார். பேட்டிங்கில் மட்டுமில்லாமல் களத்திலும் சூர்யவன்ஷி தற்போது தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tilak Varma was forced to endure Suryavanshis sledging


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->