ஒரு வார காலம் சுற்றுப்பயணமாக நாளை முதல்வர் விஜய் லண்டன் பயணம்..!
Chief Minister Vijay to travel to London tomorrow for a week long tour
தமிழ்நாடு முதல்வர் திரு. ஜோசப் விஜய் ஒரு வார கால பயணமாக லண்டனுக்கு செல்லவுள்ளார். சென்னை விமான நிலையத்தில் இருந்து நாளை (10-ஆம் தேதி) இரவு செல்லவுள்ளார். பின்னர் தனது லண்டன் பயணத்தை முடித்துவிட்டு வரும் 16-ஆம் தேதி இரவு 08.30 மணியளவில் சென்னை திரும்பவுள்ளார்.
சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் துபாய் வழியாக லண்டனுக்கு புறப்பட்டு செல்கிறார். லண்டனில் சில நாட்கள் தங்கியிருக்கும் முதல்வர் ஜோசப் விஜய், அங்கு ஐரோப்பிய நாட்டு தொழிலதிபர்களை நேரில் சந்தித்து தமிழ்நாட்டில் புதிய தொழில்கள் துவங்கி, அதிக முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்வார் என்று கூறப்படுகிறது.
அதன் பின்னர் தனது ஒரு வார கால பயணத்தை முடித்துக் கொண்டு, லண்டனிலிருந்து வரும் 16-ஆம் தேதி எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் துபாய் வழியாக முதல்வர் ஜோசப் விஜய் சென்னைக்கு இரவு 08.30 மணியளவில் வந்து சேரவுள்ளார்.
தமிழ்நாடு முதல்வராக பொறுப்பேற்ற ஜோசப் விஜய் முதன்முறையாக சென்னையில் இருந்து லண்டனுக்கு பயணிகள் விமானம் மூலமாக பயணம் செய்வதால், விமானநிலையத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று காலை சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிகளின் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Chief Minister Vijay to travel to London tomorrow for a week long tour