ஜூன் 7 ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! - Seithipunal
Seithipunal


2026 தேர்தலை முன்னிட்டு திமுக தீவிரமாக பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. குறிப்பாக 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கோடு கட்சியினர் உழைக்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் முதலவர் ஸ்டாலின் அறிவுறுத்தி வருகிறார்.

மேலும், அண்மையில் நடந்த மதுரை திமுக பொதுக்குழு கூட்டம் திமுகவினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், வரும் ஜூன் 7 ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், மாவட்டக் கழகச் செயலாளர்கள், பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் வரும் ஜூன் 7 ஆம் தேதி காலை காணொலிக் காட்சி வழியாக நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில், அனைவரும் தவறாது பங்கேற்க வேண்டும் எனவும், உறுப்பினர் சேர்க்கை தொடர்பான முக்கிய ஆலோசனைகள் இதில் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK Durai Murugan MK Stalin DS Meet


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->