நவம்பர் 14 க்குள் 76 கால்நடை மருத்துவ பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்; தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!
Tamil Nadu government announces that applications can be made for 76 veterinary posts by November 14th
76 கால்நடை மருத்துவ பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு விலங்குகள் நலவாரியம் மாநிலம் முழுவதும் மாவட்ட அளவில் பல்வேறு விலங்குகள் நலன் தொடர்பான பணிகளை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
அதன்படி, விலங்குகள் நலன் தொடர்பாக பணியாற்ற ஏதுவாக 38 மாவட்ட விலங்குகள் நல அலுவலர்கள். ஜல்லிக்கட்டு போன்ற நிகழ்வுகளில் விலங்குகளுக்கு துன்பம் ஏற்படா வண்ணம் நடைபெற உறுதி செய்வது, விலங்குகள் மீது வன்முறை நிகழ்த்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது மற்றும் மாவட்ட அளவில் விலங்குகள் துயர் துடைப்பு சங்கங்களை (SPCA) உருவாக்கி செயல்பாட்டிற்கு கொண்டு வருவது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது.

அதற்காக 38 கால்நடை கிளை நிலையங்களுடன் இணைந்த அறுவை சிகிச்சை மையத்தில் சமூக நாய் இனப்பெருக்க கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்தல், ரேபிஸ் தடுப்பூசி செலுத்துதல் மற்றும் பொறுப்பாக செல்லப்பிராணிகளை பராமரிப்பு குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு முகாம்கள் நடத்துதல் போன்ற பணிகளை சிறப்பாக செயல்படுத்துவதற்கென 38 கால்நடை மருத்துவர்களும் மாத மதிப்பூதியம் ரூ.56,000/- அடிப்படையில் மொத்தம் 76 இடங்களுக்கு ஒரு வருட காலத்திற்கு நியமித்திட ஏதுவாக தகுதியுள்ள கால்நடை மருத்துவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விரிவான வழிகாட்டுதல்களுடன் கூடிய விண்ணப்பப் படிவம் தமிழ்நாடு விலங்குகள் நலவாரிய இணையதளம் www.tnawb.tn.gov.in இல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கீழே குறிப்பிட்டுள்ள முகவரிக்கு 14.11.2025-க்குள் தபால் மூலம் அனுப்பிவைக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Tamil Nadu government announces that applications can be made for 76 veterinary posts by November 14th