எண்ணெய் நிறுவனங்களுக்கு பொருளாதார தடை: 'இந்த நடவடிக்கை போர் பிரகடனத்திற்கு சமம்': ரஷ்யா கண்டனம்..!
Russia condemns US sanctions as tantamount to a declaration of war
ரஷ்யா-உக்ரைன் இடையே போர் நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சி செய்து வருகிறார். ஆனாலும் முயற்சி பலனளிக்கவில்லை. இந்நிலையில், ரஷ்யாவின் 02 பெரிய எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்நெப்ட், லுகோயில் மீது அமெரிக்க பொருளாதார தடை விதித்துள்ளது.
இது குறித்து டொனால்ட் டிரம்ப் கூறுகையில், 'இந்த பொருளாதார தடை என்பது மிகப்பெரியவை. ரஷ்யாவின் 02 மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை நீண்ட நாட்கள் நீடிக்காது என்று நம்புகிறோம். போர் விரைவில் முடிவுக்கு வரும்' என்று ’ குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அமெரிக்க கருவூலத் துறையின் வெளிநாட்டு சொத்து கட்டுப்பாட்டு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: 'நிரந்தர அமைதி என்பது ரஷ்யாவை பொறுத்தது. இன்றைய நடவடிக்கைகள் ரஷ்யாவின் எரிசக்தி துறைகள் மீது அழுத்தத்தை அதிகரிக்கிறது. ரஷ்யாவின் பொருளாதாரத்தில் பலவீனத்தை ஏற்படுத்தும். அமெரிக்கா தொடர்ந்து ராஜதந்திர தீர்வை பின்பற்றுவதில் உறுதியாக உள்ளது. நிரந்தர அமைதி முற்றிலும் ரஷ்யாவின் நல்லெண்ண பேச்சுவார்த்தையை பொறுத்தது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக, ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் துணை தலைவர் டிமிட்ரி மெத்வதேவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: 'ரஷ்யாவின் எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடை, போர் பிரகடனத்திற்கு சமம்.
ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் இடையிலான மோதலுக்கான மூல காரணங்களைத் தீர்க்க வேண்டும். அமெரிக்க எங்கள் எதிர்போல் செயல்படுகிறது, அவர்களின் 'அமைதி விரும்பி' தற்போது ரஷ்யாவுக்கு எதிரான போர் பாதையில் செல்கிறார். அமெரிக்கா ஏமாற்றப்பட்ட ஐரோப்பாவுடன் தன்னை கூட்டாளியாக இணைத்துக் கொண்டுள்ளது. உக்ரைனில் போரை நிறுத்த, ரஷ்யாவை கட்டுப்படுத்த அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகள் எதிர்மறையானவை' என்று கடுமையாக விமர்சித்து அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Russia condemns US sanctions as tantamount to a declaration of war