'அதிமுக தலைமைக்கு 10 நாட்கள் கெடு விதிக்கவில்லை; ஊடகங்கள்தான் அதனை தவறாக புரிந்து கொண்டது': செங்கோட்டையன் விளக்கம்..!
Sengottaiyan explains that he did not give a 10 day deadline to the AIADMK leadership
முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் கட்சி ஒன்றிணைப்பு குறித்து பேசியமாய் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதாவது, அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க 10 நாட்களில் முயற்சி எடுக்க வேண்டும் என்று கட்சித் தலைமைக்கு (எடப்பாடி பழனிசாமிக்கு) 10 நாள் கெடு விதித்ததாக செய்திகள் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியது.
இதைதொடர்ந்து, செங்கோட்டையனை கட்சிப் பதவிகளில் இருந்து பொதுச் செயலாளர் பழனிசாமி அதிரடியாக நீக்கியுள்ளார். அதன்பின்னர், டெல்லிக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை சந்தித்துப் பேசினார். இவரை தொடர்ந்துசெங்கோட்டையனும் டெல்லிக்குச் சென்றார். அங்கு அவர் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை தனியாக சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்குப் பிறகு, செங்கோட்டையன் அமைதி காத்து வந்தார்.

இந்நிலையில், கோபி செட்டிபாளையத்தில் அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். இதன்போது அவர் கூறுகையில்,"அதிமுக ஒன்றிணைவது குறித்து கட்சி தலைமைக்கு 10 நாட்கள் கெடு விதிக்கவில்லை. ஊடகங்கள்தான் அதனை தவறாக புரிந்து கொண்டது. 10 நாட்களில் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும், ஒன்றரை மாதத்தில் முடிவு எடுக்க வேண்டும் என்றுதான் தெரிவித்தேன். பொறுத்திருந்து பாருங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Sengottaiyan explains that he did not give a 10 day deadline to the AIADMK leadership