நர்சிங் கூட முடிக்காமல் வீட்டில் கிளினிக் நடத்திய போலி டாக்டர் கைது..!
Fake doctor arrested for running a clinic at home without studying medicine
மருத்துவம் படிக்காமல், வீட்டிலேயே கிளினிக் நடத்தி மருத்துவம் பார்த்த போலி பெண் மருத்துவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நரசிம்மா காலனியை சேர்ந்தவர் ஜெபின் பானு (55). இவர் அந்த பகுதியில் உள்ள தனது வீட்டிலேயே, நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளார். முறையாக மருத்துவம் படிக்காமல் அவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதாக, ஓசூர் துணை ஆட்சியர் அலுவலகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, அதன்பேரில் துணை ஆட்சியர் ஆக்ருதி செட்டி உத்தரவின் பேரில், ஓசூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் லட்சுமி மற்றும் ஓசூர் சரக மருந்துகள் ஆய்வாளர் விஜயலட்சுமி ஆகியோர், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர்.

அப்போது, போலியாக மருத்துவம் பார்த்து வந்த ஜெபின் பானு முறையாக மருத்துவம் மற்றும் நர்சிங் படிக்கவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் அவர், மேலும் சித்த மருத்துவத்திற்கு படித்ததாக கூறி, சில போலி சான்றிதழ்களையும் வைத்திருந்துள்ளார். அதனையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். மேலும், அவரிடம் இருந்த சில ஆங்கில மருந்து, மாத்திரைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
பின்னர், ஜெபின் பானுவை அட்கோ போலீசாரிடம் ஒப்படைத்த நிலையில், அவர்கள் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவர் மருத்துவம் பார்த்து வந்த அறையை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Fake doctor arrested for running a clinic at home without studying medicine