கேட்கிற கேள்வியே தப்பு - செய்தியாளரிடம் கோபப்பட்ட தி.மு.க வேட்பாளர்.! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சியினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில், தேனி தொகுதி திமுக வேட்பாளர் தங்கத்தமிழ்ச்செல்வன் இதுவரைக்கும் மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்காமல் தேனி நாடாளுமன்ற தொகுதிக்கப்பட்ட மதுரை மாவட்டம் உசிலம்பட்டிப் பகுதியில் 4க்கும் மேற்ப்பட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடத்தி நிர்வாகிகளை சந்தித்துள்ளார். 

இந்த நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூர் கிராமத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்டு உயிர்நீத்த வீரத்தியாகிகளின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் திமுக சார்பில் மதுரை புறநகர் மாவட்டச்செயலாளர் மணிமாறன் தலைமையில் தேனி வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசியா அவர் கச்சத்தீவு பிரச்சனையை தேர்தலுக்காக மத்திய அரசு பயன்படுத்தி வருகின்றது என்று  குற்றம் சாட்டினார். அப்போது நிருபர் ஒருவர் இன்னும் மக்களிடம் வாக்கு சேகரிக்க வராமல் இருப்பது குறித்து கேள்வி எழுப்பினார்.

உடனே கோபப்பட்ட தங்கத்தமிழ்செல்வன், “எந்த டிவிப்பா நீ, டிடிவி தினகரனை 4 ஊர்ல அடிச்சு விரட்டுனாங்க அத போட்டியா நீ. கேட்கிற கேள்வியே தப்பு. உன் கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது" என்று பாதியிலேயே புறப்பட்டுச் சென்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk candidate thangatamilselvan press meet in madurai


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?
Seithipunal
--> -->