உடைந்தது தேமுதிக! தனிக்கட்சி தொடங்கிய முக்கிய புள்ளி!
DMDK Spilt and New Party start in Ranipet
உட்கட்சி தேர்தல் விவகாரத்தில் தேமுதிக முன்னாள் மாவட்டச் செயலாளர் ஒருவர் தனிக்கட்சியி தொடக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட தேமுதிக முன்னாள் செயலாளர் பூட்டுத்தாக்கு நித்யா கடந்த சில வரங்களாவே கட்சியிலிருந்து விலகியிருந்தார்.
இந்த நிலையில், நேற்று புதிதாக ஒரு கட்சியை அவர் தொடங்கியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
'தேசிய திராவிட கழகம்' என்று தனது கட்சிக்கு பெயர் வைத்துள்ள நித்யா, கட்சிக்கொடியையும் நேற்று அறிமுகப்படுத்தினார்.
ராணிப்பேட்டை சிப்காட் பாரதிநகரில் உள்ள தமிழ்நாடு ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியில் இதனை அவர் அறிமுகம் செய்தார்.
தனது புதிய கட்சி குறித்து நித்யா தெரிவிக்கையில், "தேமுதிக உட்கட்சி தேர்தலில், நான் பரிந்துரை செய்த தேமுதிக தொண்டர் ஒருவருக்கு கூட பதவி வழங்கவில்லை.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளை எந்த முறையில் தலைமை அறிவித்துள்ளது என்று தெரியவில்லை.
கட்சி நிர்வாகிகளை கலந்தாலோசித்து எந்த ஒரு நிர்வாகியையும் தேர்வு செய்யவில்லை. இந்த அதிருப்தி காரணமாக தேமுதிகவில் இருந்து விலகி, தேசிய திராவிட கழகம் என்ற புதிய கட்சியை ஆரம்பித்துள்ளேன். அதற்கான கொடியையும் அறிமுகம் செய்துள்ளேன்" என்று நித்யா தெரிவித்தார்.
தேமுதிக உடைந்து புதிய கட்சி உருவாக்குவது இது முதல்முறை அல்ல. ஏற்கனவே பல கட்சிகள் உருவாகி, பின் காணாமல் போகி, திமுக உள்ளிட்ட பெரிய கட்சிகளில் ஐக்கியமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
DMDK Spilt and New Party start in Ranipet