பள்ளி பேருந்துகளை அதிகாரிகளுடன் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி!
District Collector Brinda Devi inspected the school buses with the officials
சேலம் மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு உட்பட்ட 36 பள்ளிகளின் 269 பேருந்துகள் ஆட்சியர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் முன்னிலையில் ஆய்வு நடைபெற்றது.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவ மாணவிகளை ஏற்றிச்செல்லும் பள்ளி வாகனங்களை முறையாக பராமரிப்பு செய்யப்படுகிறதா என்பன உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன அதன் பிறகு வாகனங்கள் இயக்க அனுமதி வழங்கப்படுகிறது அதன் அடிப்படையில் ஆண்டுதோறும் பள்ளி மாணவ மாணவிகளை அழைத்துச் செல்லும் பேருந்துகளை ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன சேலம் மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு உட்பட்ட 36 பள்ளிகளின் 375 வாகனங்கள் உள்ளன இதில் 269 வாகனங்கள் சேலம் மூன்றோடு பகுதியில் உள்ள தனியார் திடலில் ஆய்வு மேற்கொள்ளும் பணி நடைபெற்றது மாவட்ட கலெக்டர் பிருந்தா தேவி தலைமையில் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் கோகிலா மோட்டார் வாகன ஆய்வாளர் ஜெயந்தி ஆகியோர் முன்னிலையில் வாகனங்களை ஆய்வு மேற்கொண்டனர் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் முன்பகுதி பின்பகுதி ஆகியவை சரியாக செயல்படுகிறதா அவசர வழி மற்றும் பிரேக் கியர் முதலுதவி சிகிச்சை பெட்டி தகுதி சான்று மற்றும் வண்டியின் உட்புற கட்டமைப்பு இருக்கையின் உறுதித் தன்மை உள்ளிட்டவைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர் மேலும் தகுதிச் சான்று பதிவுசான்று ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவைகளையும் ஆய்வு மேற்கொண்டனர் இந்த ஆய்வில் 9 பேருந்து வண்டிகளில் சிறு குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது அதனை பள்ளியின் நிர்வாகத்திடம் தெரிவித்து ஒரு வாரத்தில் சரி செய்ய அறிவுறுத்தப்பட்டது
முன்னதாக பேருந்துகளை இயக்கம் டிரைவர்களுக்கு கண் பரிசோதனையும் பேருந்து இயக்கும் போது திடீரென ஏற்படும் தீ விபத்தில் எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது குறித்து செயல்முறை விளக்கத்தை தீயணைப்பு நிலைய மாவட்ட உதவி அலுவலர் பாலகிருஷ்ணன் தலைமையில் வீரர்கள் செய்து காட்டினர்
இதுகுறித்து மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் கோகிலா கூறும்போது ஆண்டு தோறும் பள்ளி வாகனங்களை ஆய்வுக்கு உட்படுத்தப்படுவது வழக்கம் அந்த வகையில் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட 269 வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது இதில் 9 பேருந்துகளில் குறைபாடுகள் கண்டறியப்பட்டு அதனை சரி செய்ய உத்திராடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார் பள்ளி மாணவ மாணவிகளின் அச்சமின்றி பயணிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார் தொடர்ந்து பள்ளி திறக்கும் வரை இந்த சோதனை நடைபெறும் எனவும் கூறினார்.
English Summary
District Collector Brinda Devi inspected the school buses with the officials