விவசாயி கொலை வழக்கில் சிக்கிய மாற்றுத்திறனாளி! அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிபதி!
disabled person jail farmer murder case
திருவண்ணாமலை, ஜமுனாமரத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சின்னதுரை (வயது 37) இவர் விவசாயி. இவருக்கும் இவரது உறவினரான அதே பகுதியை சேர்ந்த துரை என்பவருக்கும் நிலத்தகராறு இருந்து வந்துள்ளது.
துரை மாற்று திறனாளி ஆவார். இந்நிலையில் சின்னதுரை கடந்த 2012 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி துரைக்குச் சொந்தமான நிலத்தில் மாடுகளை மேய்த்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த துரை மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் வெள்ளையன், இந்திராணி, ஜானகி உள்பட 4 பேரும் சேர்ந்து சின்னதுரையை சரமாரியாக உருட்டு கட்டையால் தாக்கியுள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த சின்னதுரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிலிருந்து விட்டார்.
இது தொடர்பாக ஜமுனாமரத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலயாளிகளான துரை உள்பட 4 பேரை கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிந்து நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பில் கொலை செய்த துரைக்கு ஓராண்டு காலம் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டது.
மேலும் வெள்ளையப்பன், இந்திராணி, ஜானகி ஆகிய 3 பேரும் இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.
English Summary
disabled person jail farmer murder case