மாஸ்க் போடாததால் சர்ச்சை... தட்டிக்கேட்ட பத்திரிகையாளரை தாக்க முயற்சி.! - Seithipunal
Seithipunal


விஜய் சேதுபதி நடத்தும் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில், பத்திரிக்கையாளர் ஒருவரை படக்குழுவினர் தாக்க முயன்றதாக கூறப்படும் சம்பவம் அரங்கேறியுள்ளது. 

குறுகிய காலத்தில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நடிகர் விஜய் சேதுபதி. அவ்வப்போது பல புரட்சிகரமான விஷயங்களை பேசி மக்களிடம் வம்பு வாங்கி செல்வது வழக்கமான விஷயம். மேலும், இவர் பேசும் புரட்சியெல்லாம் வருமானத்திற்காக நடிக்கும் படங்களில் இருக்காது என்றும், ஏனெனில் அது வயிற்றுப்பிழைப்பு என்றும் நெட்டிசன்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 

10 படம் நடித்த விட்டோம், நாம் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற மமதையில் சுற்றி திரியும் விஜய் சேதுபதிக்கு, அவ்வப்போது நெட்டிசன்கள் தக்க மரியாதை செய்து வருகின்றனர். இந்நிலையில், திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 

படக்குழுவினர் கொரோனா தடுப்பு வழிகளை பின்பற்றவில்லை என்று கூறி அங்கு இருந்த பத்திரிக்கையாளர் அதனை புகைப்படம் எடுக்க முயற்சிக்கவே, படக்குழுவினர் அவரை தாக்கியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சக பத்திரிகையாளர்கள், உடனடியாக தர்ணா போராட்டத்தில் குதித்துள்ளனர். 

இதனால் அங்கு வாக்குவாதம் கூச்சல், குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு வந்த நடிகர் விஜய் சேதுபதி சமாதானம் செய்ய முயற்சிக்கவே, படக்குழுவினர் மிரட்டல் விடுத்தவர்களை காவல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dindigul Vijay Sethupathi Film Shooting Spot Press Peoples Protest


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவுAdvertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவு
Seithipunal