பசுபதி பாண்டியன் கொலைக்கு பழிக்குப்பழி கொலை விவகாரம்.. குற்றவாளிகள் நீதிமன்றத்தில் சரண்.! - Seithipunal
Seithipunal


பசுபதி பாண்டியனின் கொலை வழக்கில் தொடர்புடைய நிர்மலா தேவி என்ற பெண் கொலை விவகாரத்தில், 5 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நந்தவன்பட்டியில், கடந்த 2012 ஆம் வருடம் ஜனவரி மாதம் 10 ஆம் தேதி தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனரான பசுபதி பாண்டியன், அவரின் வீட்டில் வைத்து வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் தூத்துக்குடியை சார்ந்த சுபாஷ் பண்ணையார் உட்பட 18 பேர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு, இவ்வழக்கு தொடர்பான விசாரணை திண்டுக்கல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 

இந்த வழக்கில் தொடர்புடைய நந்தவனப்பட்டி பகுதியை சார்ந்த நிர்மலா தேவி (வயது 60), இன்று அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கடந்த 22 ஆம் தேதி கொலை செய்யப்பட்டார்.  திண்டுக்கல்லில் உள்ள செட்டிநாயக்கன்பட்டி இ.பி காலனி டேவிட் நகர் பகுதி அருகே கொலை செய்து, தலையை தனியாக வெட்டியெடுத்து பசுபதி பாண்டியனின் வீட்டில் போட்டுவிட்டு மர்ம கும்பல் தப்பி சென்றது. 

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் அதிகாரிகள், நிர்மலா தேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலையாளிகளை தேட தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரமாக நடந்து வந்தது.

இந்நிலையில், பசுபதி பாண்டியனின் கொலை வழக்கில் தொடர்புடைய நிர்மலா தேவி என்ற பெண்மணி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், காவல் துறையினர் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த சூழலில், திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்றவாளிகள் 5 பேர் சரணடைந்துள்ளார். அவர்கள் காவல்துறை விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பின்னர் நிர்மலா தேவியின் கொலைக்கான மர்மம் விலகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், நேற்று இரவு இவ்வழக்கில் தொடர்புடைய 3 பேர் பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக காத்திருந்த போது, காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dindigul Pasupathi Pandiyan Murder Revenge Woman Killed Culprits Surrender at Trichy Court


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->