திமுக கூட்டத்துக்கு வந்த உபிஸ், ஓ.சி சோறு கேட்டு அட்டகாசம்.. ரூ.1060 க்கு கொட்டிக்கொண்டு பணம் கொடுக்க முடியாதென மிரட்டல்.! - Seithipunal
Seithipunal


நாங்க திமுக.. எங்களிடமே நீ பணம் கேட்கிறாயா?.. கடை நடத்தணுமா வேண்டாமா? என்று உணவகத்தில் சாப்பிட்ட திமுகவினர் ஓ.சி சொறுக்கு அடாவடி செய்த சம்பவம் திண்டுக்கல்லில் அரங்கேறியுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.ஆர் கலையரங்கம் பகுதியில் நகராட்சிக்கு கட்டுப்பட்ட வாகன நிறுத்துமிடம் உள்ளது. இந்த பகுதியில் 100 க்கும் மேற்பட்ட கடைகள் உள்ள நிலையில், பழனியில் வைத்து திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றுள்ளது. 

இந்த கூட்டத்திற்கு கொடைக்கானல் மற்றும் மேல்மலை கிராம பகுதிகளில் இருந்து திமுகவினர் வந்த நிலையில், கலையரங்க பகுதியில் கணேசன் என்பவர் இரவு உணவகம் நடத்தி வந்துள்ளார். செயல்வீரர்கள் கூட்டத்திற்கு வந்த 7 திமுக உடன்பிறப்புகள், சாப்பிடுவதற்கு உணவகத்திற்கு சென்றுள்ளனர். 

மதுபோதையில் இருந்த அவர்கள் அசைவ உணவுகளை வாங்கி வயித்தை நிரம்பிக்கொண்ட நிலையில், மொத்தமாக 7 பேரும் சேர்ந்து ரூ.1060 க்கு உணவு சாப்பிட்டுள்ளார். ஆனால், அவர்களின் கையில் பணம் இல்லாததால் ரூ.460 தந்து சாப்பிட்டதற்கு பில் இவ்வுளவுதான் என்று தகராறு செய்துளளனர். 

மேலும், குறைந்த அளவு தான் நாங்கள் சாப்பிட்டோம் என்றும் மதுபோதையில் பிரச்சனை செய்த நிலையில், நாங்கள் யார் தெரியுமா?.. நாங்க திமுக.. எங்களிடமே நீ பணம் கேட்கிறாயா?.. கடை நடத்தணுமா வேண்டாமா?. பக்கத்துல தான் கூட்டம் நடக்கு, ஆளை கூட்டிவந்து கடையை அடித்து நொறுக்கிவிடட்டுமா? என்று தகராறு செய்துள்ளனர்.

இதனையடுத்து கடைக்கு சாப்பிட வந்திருந்த பொதுமக்களில் இருந்து, உணவக ஊழியர்கள் வரை அனைவருமே அலைபேசியில் வீடியோ பதிவு செய்ததால், சுதாரித்துக்கொண்ட ஒரு உடன்பிறப்பு அங்கிருந்து அனைவரையும் அழைத்து சென்றது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ள நிலையில், காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dindigul DMK Culprits Make Rupture Eat food at Hotel and did not give Money


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவுAdvertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவு
Seithipunal