பைக்கை திருட நூதன டெக்னீக்.. திருட்டு வாகனத்திலேயே கம்பளி விற்பனை.. வடக்கன்ஸ் நூதன மூமென்ட்.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் வடமதுரை பகுதியை சார்ந்தவர் குமரேசன். இவர் திருமண மண்டபம் வைத்துள்ள நிலையில், இவரது திருமண மண்டபத்தில் சரஸ்வதி என்பவர் பணியாற்றி வருகிறார். 

இன்று வழக்கம்போல இரவு நேரத்தில் சரஸ்வதியை வீட்டில் விட சென்ற குமரேசன், அய்யலூர் பாலம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்துள்ளனர். இதன்போது, பாலத்தின் மீது வைக்கப்பட்டு இருந்த கல்லில் வாகனம் ஏறி, இருவரும் கீழே விழுந்துள்ளார்.  

இதில், குமரேசன் காயத்தால் அலறவே, வாகனத்தை தூக்கி நிறுத்திவிட்டு சரஸ்வதி குமரேசனை மீட்டுள்ளார். இதன்போது, திடீரென வந்த மர்ம நபர், வாகனத்தை திருடி சென்றுள்ளான். ஒருபுறம் முதலாளி மற்றொருபுறம் முதலாளியின் வாகனம் திருட்டு என தவித்த சரஸ்வதி, உடனடியாக குமரேசனை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.  

பின்னர் சைக்கிள் மாயமானது தொடர்பாக வடமதுரை காவல் நிலையத்தில் புகாரளிக்கவே, இந்த புகாரை ஏற்ற காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், இரு சக்கர வாகனத்தில் கம்பளி விற்பனை செய்துகொண்டு இருந்த ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜாலாவர் மாவட்டத்தை சார்ந்த 23 வயது கொலெஸ் என்பவனை கைது செய்தனர். 

விசாரணையில், குமரேசனின் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றதும், அந்த வாகனத்திலேயே கம்பளி வியாபாரமும் செய்ததும் தெரியவந்துள்ளது. மேலும், சாலையின் நடுவே வேண்டும் என்ற கல்லை வைத்து, அதில் சிக்கி கீழே விழும் நபர்களின் வாகனத்தை திருடி சென்றதும் அம்பலமானது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dindigul Bike Robbery by North Indian Youngster 29 Jan 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal