தருமபுரி அருகே பயங்கரம்: ஆட்டோ - பைக் நேருக்கு நேர் மோதல்; இரு இளைஞர்கள் பரிதாப பலி!
Dharmapuri Two youths death in Road accident
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே இன்று (திங்கட்கிழமை) காலை நிகழ்ந்த கோர சாலை விபத்தில் இரண்டு வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்தின் விவரம்:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம், சீரியம்பட்டியைச் சேர்ந்த ராகுல் (28) மற்றும் வேப்பிலைஹள்ளியைச் சேர்ந்த ஹரிநாத் (25) ஆகிய இருவரும் இன்று முற்பகலில் இருசக்கர வாகனத்தில் பெல்ரம்பட்டி நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.
தேசிய நெடுஞ்சாலையில் அவர்கள் சென்றபோது, எதிரே வந்த ஆட்டோ ஒன்று எதிர்பாராத விதமாக இவர்கள் சென்ற பைக் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டுப் பலத்த காயமடைந்தனர்.
சிகிச்சை மற்றும் உயிரிழப்பு:
அக்கம் பக்கத்தினர் மற்றும் போலீஸார் விரைந்து வந்து இருவரையும் மீட்டு, பெல்ரம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். எனினும், அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
போலீஸ் நடவடிக்கை:
சம்பவம் குறித்து மாரண்ட அள்ளி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த இளைஞர்களின் உடல்கள் உடற்கூறாய்வுக்காகத் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
English Summary
Dharmapuri Two youths death in Road accident