வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு! தர்மபுரியில் பாமக முன்னாள் எம்பி திண்ணை பிரச்சாரம்! - Seithipunal
Seithipunal


தர்மபுரியில் வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு விழிப்புணர்வு திண்ணை பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டின் பலனை கிராமங்கள் தோறும் எடுத்து சொல்லும் விதமாக, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸின் ஆலோசனைப்படி பாட்டாளி மக்கள் கட்சியினர் திண்ணை பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்று கொண்டிருக்கிறது. 

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் நடைபெற்ற திண்ணை பிரச்சாரங்களில், கூடிய மக்கள் 10.5% உள் ஒதுக்கீடு பெற்றுத் தந்து, அவர்கள் வாழ்வின் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட மருத்துவர் இராமதாசுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர். 

இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பித்த பாமகவின் தர்மபுரி மக்களவை தொகுதியின் முன்னாள்  உறுப்பினர் மருத்துவர் இரா.செந்தில், தன்னுடைய முகநூல் பக்கத்தில், " சிவப்புக் கம்பளத்தில் நடந்து, சிவப்புக் கம்பள விரிப்பில் உட்கார்ந்து, ஒலிபெருக்கியில் பேசுகிற நாடகங்கள் கிராம கூட்டங்கள் அல்ல. 

மேடையில் ஒருவரும் மற்றவர்கள் தரையிலும் என்பதல்ல. அவர்களோடு அமர்ந்து, அவர்கள் இதயங்களோடு பேசுவது தான் கிராமக் கூட்டங்கள். அவர்களோடு இணைந்து, அவர்களில் ஒருவராக, அவர்களுக்காகப் பணியாற்றுவது தான் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த மக்கள் தொண்டனின் பண்பு. அதைத்தான் மருத்துவர் இராமதாஸ் பாமக தொண்டர்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார். வன்னியர்களின் வாழ்வின் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட மருத்துவர் இராமதாசுக்கு நன்றி" என்று தெரிவித்துள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dharmapuri PMK and Vanniyar Sangam Celebration and Makes Shrine campaign


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->