விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்... மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


தர்மபுரி மாவட்ட விவசாயிகளின் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் ஜனவரி 27ம் தேதி வெள்ளிக்கிழமை  காலை 11:00 மணியளவில் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் " தர்மபுரி மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள் வேளாண் தொடர்பான குறைகளையும் கருத்துகளையும் எடுத்துக் கூறும் வகையில் விவசாயிகள் குறைத்து இருக்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டமானது வருகின்ற ஜனவரி 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 11 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் வருவாய் துறை மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

எனவே தர்மபுரி மாவட்ட விவசாயிகள் அனைவரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களையும் குறைபாடுகளையும் எடுத்துக் கூறி பயனடைய வேண்டும்" என தர்மபுரி மாவட்ட ஆட்சிய சாந்தி அவர்கள் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dharmapuri Collector announced farmers grievance day meeting on jan27


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->