ஆண்டிபட்டி பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..261 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன!  - Seithipunal
Seithipunal


ஆண்டிபட்டி பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில்  பல்வேறு பாடப்பிரிவுகளின் கீழ் 261 மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது .

   தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியின் 23வது ஆண்டு பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. கல்லூரி அரங்கத்தில் நடைபெற்ற இந்த விழாவிற்கு கல்லூரியின் கல்வி குழுமத் தலைவர் டாக்டர் மோகன் அவர்கள் தலைமை தாங்கினார்கள். கல்லூரி துணைத் தலைவர்கள் பிரசன்ன வெங்கடேசன், ரேணுகா மோகன், சுதா மீனாட்சி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். கல்லூரி முதல்வர் முனைவர் அருள்குமார் வரவேற்று பேசினார்.

    மதுரை அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத் துணை இயக்குனர் முனைவர் மாலதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பாராட்டி பேசினார். மேலும் இன்றைய வாழ்வியல் குறித்தும் மற்றும் தொழில் முனைவோர்க்கான நல்வழி குறித்தும் விளக்கி பேசினார்.

 விழாவில் கல்லூரியில் பயின்ற மாணவி யுவசக்தி சிவில் பாடப்பிரிவில் மாநில அளவில் 24 ஆம் இடத்தை பெற்றமைக்கு ,அவரைப்  பாராட்டி பதக்கம் வழங்கப்பட்டது. பல்வேறு பாடப்பிரிவுகளின் கீழ் 261 மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது .விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி மேலாளர் நாகேந்திரன், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி அலுவலர்கள் செய்திருந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Degree awarding ceremony at Andipatti Bharath Niketan Engineering College Degrees were awarded to 261 students


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->