நகராட்சிக்கு எதிராக சாகும் வரை உண்ணாவிரதம்! தருமபுரம் ஆதீனம் அறிவிப்பு!! - Seithipunal
Seithipunal


மயிலாடுதுறை மாவட்டம் மயூரநாதர் வடக்கு வீதியில் நகராட்சிக்கு சொந்தமான இலவச பிரசவ மருத்துவமனை உள்ளது. கடந்த 1943 ஆம் ஆண்டு தருமபுரம் தினத்தின் 24வது மடாதிபதி பிரசவத்தின் போது இறந்து போன அவரது தாயாரின் நினைவாக ஆதீனத்திற்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் அந்த மருத்துவமனையை கட்டினார்.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை நல்ல நிலையில் செயல்பட்டு வந்த அந்த மருத்துவமனை நகராட்சியின் பராமரிப்பு இன்மையால் பழுதடைந்து குப்பைமேடாக மாறியது. அந்த இடத்தை மீண்டும் ஆதீன மடத்திடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், அதில் மீண்டும் இலவச மருத்துவமனை அமைக்க போவதாகவும் தற்போதைய ஆதீனம் நகராட்சி நிர்வாகம் மற்றும் தமிழக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தார்.

ஆனால் அதற்கு பதில் வராத நிலையில் அந்த இடத்தை மேலும் விரிவு படுத்தி குப்பை கிடங்கு அமைக்கப் போவதாக நாளேடுகளில் செய்தி வெளியானது. இந்த நிலையில் தருமபுரம் ஆதீனம் குருமாக சன்னிதானம் விடுத்துள்ள அறிக்கையில் இலவச மருத்துவமனையை இடிக்க போவதாக செய்தி வந்துள்ளது. அப்படி ஒரு நிகழ்வு ஏற்படுமாயின் நம் முன்னோர்கள் அமைத்த நினைவு அமைப்பினை காக்க சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம் என அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Darumapuram Adheenam announced fasting till death


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->