#திருச்சி|| கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயத்தில் தீண்டாமை.. தலித் கிறிஸ்தவர்கள் வேதனை..!! - Seithipunal
Seithipunal


இந்து சமயத்தில் தீண்டாமை கடைப்பிடிப்பதாகவும் கிறித்துவம் மற்றும் இஸ்லாமிய மதங்களில் தீண்டாமை கடைபிடிப்பது இல்லை என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திராவிட சிந்தனை கொண்டவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் கிறித்துவ மதத்தில் தலித் மக்களுக்கு எதிராக தீண்டாமை கடைபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அய்யம்பட்டியை சேர்ந்த கிறித்துவ மதத்திற்கு மாறிய தலித் மக்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்பொழுது பேசிய அவர்கள் "கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற புனித மதலேன் மரியாள் ஆலய தேர் திருவிழாவுக்கு கத்தோலிக்க தலித் கிறிஸ்தவராகிய நாங்கள் வரி கொடுப்பதற்காக அய்யம்பட்டி பங்குத் தந்தையிடம் முறையிட்டோம்.

அதனை அவரும் ஏற்றுக்கொண்டார். ஆனால் கிராம முக்கியஸ்தர்கள் சிலர் எங்களிடம் வரி வாங்க எதிர்ப்பு தெரிவித்து பங்கு அருட்தந்தையை மிரட்டியதோடு இனி இந்த பங்குக்கு திருப்பலி செய்ய வரக்கூடாது எனக் கூறி அனுப்பிவிட்டனர்.

திருவிழாவின்போது சிலையை தூக்கி தேரில் வைக்கவும், தேர் பிடித்து இழுக்கவும், எங்கள் தெருவுக்கு தேர் வரவும் அனுமதிக்கவில்லை.  இந்த தீண்டாமை கொடுமை குறித்து திருச்சி மறை மாவட்ட கத்தோலிக்க ஆயரிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து வாடிகன், இந்திய மற்றும் தமிழக ஆயர் பேரவை, மத்திய, மாநில அரசுகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்" என தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dalit Christians allege Untouchability discrimination in Catholic Church


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->