தமிழகத்தில் இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த வாரம் முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு மற்றும் இதர நாட்களில் இருந்துவந்த கட்டுப்பாடு நேற்றுடன் முடிவடைந்தது. 

இதையடுத்து, கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் குறித்து மருத்துவ வல்லுனர்கள் கருத்து தெரிவித்த நிலையில், முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து, கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற் கொள்ளும் வகையிலும், பரவிவரும் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் நோயை கருத்தில் கொண்டும், பொதுமக்களின் நலனை கருதியும், எதிர்வரும் பண்டிகை காலத்தில் பொது மக்கள் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் கூட்டம் கூடுவதால் நோய்த்தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்த கருத்தின் அடிப்படையில், தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு கூடுதல் கட்டுப்பாடுகளுடன் வருகின்ற 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

அதன்படி, வரும் 14ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. 

வரும் 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்லும் பொதுமக்கள் நலன் கருதி பொது பேருந்துகளில் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் 75% மட்டுமே பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். 

தற்போது ஊரடங்கு காலங்களில் தடை செய்யப்பட்ட மற்றும் அனுமதிக்கப்பட்ட இதர செயல்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

curfew extended till jan 31 in tamilnadu


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->