பிலிப்பைன்ஸ் பெண்ணை கரம் பிடித்த கடலூர் வாலிபர்.!
cuddlore youth married philiphains woman
பிலிப்பைன்ஸ் பெண்ணை கரம் பிடித்த கடலூர் வாலிபர்.!
கடலூர் மாவட்ட்டத்தில் உள்ள திருமாணிக்குழி டி.புதுப்பாளையம் கிராம பகுதியைச் சேர்ந்தவர் பத்மநாபன். முதுநிலை பட்டதாரியான இவர் சிங்கப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
அப்போது பத்மநாபனுக்கு அதே நிறுவனத்தில் பணிபுரிந்த சக ஊழியரான பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ரோனமி டியாங்கோ குவாங்கோ என்ற பெண்ணுடன் காதல் ஏற்பட்டது. சுமார் ஒருவருடகாலமாக தங்களது காதலை வளர்த்து வந்த அவர்கள் காதல் திருமணம் செய்வது குறித்து தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்தனர்.
அதற்கு இருவீட்டு பெற்றோர்களும் சம்மதம் தெரிவிக்கவே திருமணத்தை தமிழ் கலாசாரப்படி மணமகன் வீட்டில் செய்வதாக முடிவு செய்யப்பட்டு, இதற்காக பத்மநாபன் தனது காதலி, அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என்று அனைவரையும் கடலூருக்கு அழைத்து வந்தார்.
இதையடுத்து, பத்மநாபனுக்கும், ரோனமி டியாங்கோ குவாங்கோவுக்கும் நேற்று கடலூர் அருகே உள்ள நடுவீரப்பட்டு திருமண மண்டபத்தில் இந்து முறைப்படியும், தமிழ் கலாசாரப்படியும் திருமணம் நடைபெற்றது. வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் தமிழ்முறைப்படி, வெட்டி சேலை அணிந்து திருமணம் செய்துகொண்ட சம்பவம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
English Summary
cuddlore youth married philiphains woman