மருங்கூர் அகழாய்வில் வட்டச்சில்லுகள் - தமிழர்களின் வாழ்வியல் பின்னணி இப்படித்தான் இருந்ததா?! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம் மருங்கூர் அகழாய்வில் வட்டச்சில்லுகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். 

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "தமிழர்கள் பொதுவாக ஓய்வு நேரங்களில் தங்களது பொழுதுப்போக்கிற்காக உடல் உழைப்பு  மற்றும் அறிவு சார்ந்த விளையாட்டுகளை விளையாடுவது வழக்கம். 

மருங்கூரில் வாழ்விடப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில் கடந்த வாரம் இராசராசன் காலச் செம்புக் காசு ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

தற்போது, பல்வேறு அளவுகளில் சுடுமண்ணால் ஆன வட்டச்சில்லுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.  பெண்களும் சிறுவர்களும் இந்த வட்டச்சில்லுகளைப் பயன்படுத்தி விளையாடியுள்ளனர். 

இத்தகைய விளையாட்டுகள் பாண்டி  விளையாட்டு என்று தற்போது அழைக்கப்படுகிறது. வட்டச்சில்லுகள் கண்டறியப்பட்டுள்ளதன் வாயிலாகத் தற்போது அகழாய்வு செய்யப்படும் இடம் மக்கள் கூடி வாழ்ந்த ஒரு வாழ்விடப்பகுதிதான் என்பது உறுதியாகின்றது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். 

ஏற்கனவே மருங்கூரில் கடந்த 10 தினங்களுக்கு முன் நடைபெற்ற அகழாய்வில் ராஜராஜ சோழன் காலச் செம்பு நாணயம் கண்டெடுக்கப்பட்டது.

சோழர் காலச் செம்பு நாணயம் 23.3 மி.மீ. விட்டமும் 2.5 மி.மீ. தடிமனும் 3 கிராம் எடையும் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cuddalore Marungur Archeological


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->