88வது பட்ஜெட்டில் தமிழகம் ‘மிஸ்ஸிங்’…! - அரசியல் சூடு கிளப்பிய கனிமொழி பதிவு...!
Tamil Nadu missing 88th budget Kanimozhi post stirs up political controversy
2026–27 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்வைத்த இந்த பட்ஜெட், சுதந்திர இந்தியாவின் 88வது பட்ஜெட்டாக வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.

நாட்டின் வளர்ச்சி பாதை, வருவாய்–செலவுத்திட்டங்கள், புதிய பொருளாதார முன்னுரிமைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.
இருப்பினும், தேர்தல் சூழலை முன்னிட்டு தமிழ்நாட்டுக்கு தனிப்பட்ட திட்டங்கள் அல்லது சிறப்பு நிதி ஒதுக்கீடுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்த்திருந்த நிலையில், மாநிலத்துக்கென குறிப்பிடத்தக்க அறிவிப்புகள் எதுவும் இடம்பெறாதது அரசியல் வட்டாரங்களில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
‘தமிழகத்திற்கு வெறும் வெறுமை பட்ஜெட்’ என்ற விமர்சனங்களும் எழத் தொடங்கியுள்ளன.இதுகுறித்து திமுக எம்.பி. கனிமொழி தனது சமூக வலைதளப் பதிவில் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
“இந்த பட்ஜெட் மாற்றமில்லாத ஏமாற்றமாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டின் தேவைகள் மீண்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. மத்திய பாஜக அரசை தமிழ்நாட்டை நினைவூட்ட தேர்தலே கூட போதவில்லை” என்று அவர் குற்றம்சாட்டினார்.
English Summary
Tamil Nadu missing 88th budget Kanimozhi post stirs up political controversy