எடப்பாடி குற்றச்சாட்டுக்கு மக்கள் பதில் இல்லை… மீண்டும் ஸ்டாலின் ஆட்சி வரும்! - அமைச்சர் நேரு
people no answer Edappadi allegations Stalin rule return Minister Nehru
எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுகளை மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள் என்று தி.மு.க முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் நிருபர்களை சந்தித்த அவர், பெண்களின் முன்னேற்றத்திற்காக பல புதிய நலத்திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார் என்றும், இதற்கு முன் எந்த ஆட்சியிலும் காணாத அளவுக்கு மக்கள் நலப் பணிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என்றும் கூறினார்.

2006, 2016-ம் ஆண்டுகளில் கருணாநிதி தலைமையிலான ஆட்சி சிறப்பாக இருந்தது அனைவரும் அறிந்ததே; ஆனால் தற்போது அதையும் மீறிய சிறந்த நிர்வாகத்தை ஸ்டாலின் வழங்கி வருகிறார் என பாராட்டினார்.
மேலும், கடந்த ஆறு மாதங்களாகவே தி.மு.க தேர்தல் பணிகளை தீவிரமாகத் தொடங்கி விட்டதாகவும், கூட்டணி கட்சிகள் உறுதியாக இணைந்து செயல்படுவதால் கூட்டணி வலிமையாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
கருத்துக்கணிப்புகள் அனைத்தும் தி.மு.க-க்கு சாதகமாக இருப்பதாகவும், முதல்வர் செல்லும் இடமெல்லாம் மக்கள் உற்சாக வரவேற்பு அளிப்பதாகவும் தெரிவித்தார்.
அரசின் நலத்திட்டங்கள் ஒவ்வொரு பொதுமக்களுக்கும் சென்று சேருகிறதா என்பதை நேரடியாக கண்காணித்து, குறைகள் இருந்தால் உடனடியாக அதிகாரிகளிடம் பேசி தீர்வு காண்கிறார் என்றும், ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் மூலம் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த பிரச்சினைகளுக்கே ஒரே நாளில் தீர்வு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
கூட்டணி விவகாரங்கள் குறித்து இறுதி முடிவை முதல்வரே எடுப்பார் என்றும், வரும் தேர்தலில் தி.மு.க மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி என்றும் கே.என்.நேரு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
English Summary
people no answer Edappadi allegations Stalin rule return Minister Nehru