விஜய் காட்டும் பாதை வெற்றிப் பாதை தான்! -செங்கோட்டையன் உறுதி, கோபியில் தமிழக வெற்றிக்கழக அலுவலகம் திறப்பு - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டம் கோபி மேற்கு ஒன்றியத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் புதிய அலுவலகம் இன்று கொண்டாட்டமான சூழலில் திறந்து வைக்கப்பட்டது. தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் ரிப்பன் வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்து, நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் கைதட்டலுக்கிடையில் நிகழ்ச்சியை தொடங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தைப்பூசை போன்ற புனித நாளில் இந்த அலுவலகம் திறக்கப்படுவது கட்சிக்கு நல்ல தொடக்கமாக அமையும். இதற்காக உழைத்த அனைத்து நிர்வாகிகளுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள்,” என்றார்.மேலும் அவர் கூறுகையில், “தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் காட்டும் பாதையை நோக்கி நாம் அனைவரும் உறுதியாக நகரத் தயாராக இருக்கிறோம்.

தமிழக அரசியலில் மிக விரைவில் பெரிய மாற்றம் உருவாகப் போகிறது. அந்த மாற்றத்தின் மையமாக விஜயின் வெற்றி அமையும்,” என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.“ஆளும் கட்சிக்கும், ஆண்ட கட்சிக்கும் மாற்றாக தமிழக வெற்றிக்கழகம் உருவெடுத்துள்ளது.

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று விஜய் முதலமைச்சராகுவது உறுதி. அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் பெரும் ஆர்வத்துடன் திரண்டு வருகிறார்கள். அவரை நேரில் காண வேண்டும் என்ற ஆவல் பொதுமக்களிடையே தென்படுகிறது,” என்றார்.“ஆயிரக்கணக்கான கோடி வருமானத்தைத் துறந்து, மக்களுக்காக சேவை செய்ய வந்துள்ளார் விஜய்.

கூட்டணியில் யார் சேர வேண்டும் என்பது குறித்து இறுதி முடிவை தலைவர் தான் எடுப்பார். விரைவில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணமும் அறிவிக்கப்படும். மேலும், பல மாற்றுக் கட்சியினரும் தமிழக வெற்றிக்கழகத்தில் இணையத் தயாராக உள்ளனர்,” என்று தெரிவித்தார்.

அதிமுக குறித்து கருத்து தெரிவித்த அவர், “நான் இருந்த காலத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் பெருமையாக வைக்கப்பட்டிருந்தன. இன்று அந்த கட்சி எந்த திசையில் செல்கிறது என்பதே தெரியவில்லை. ஈரோடு புறநகர் மாவட்டத்திற்கே மாவட்ட செயலாளர் கூட நியமிக்கப்படவில்லை.

இதுவே அந்தக் கட்சியின் நிலையை காட்டுகிறது,” என்று விமர்சித்தார்.“ஒவ்வொரு வீட்டிலும் குடும்பத்தோடு விஜய்க்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. மக்கள் மனதில் மாற்றத்தின் குரல் தெளிவாக கேட்கிறது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.இந்த நிகழ்ச்சியில் மேற்கு மாவட்ட செயலாளர் பிரதீப் குமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜம்பு கார்த்தி, மேற்கு ஒன்றிய செயலாளர் தமிழரசு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

path shown by Vijay indeed path success Sengottaiyan affirms opening TVK office Gobichettipalayam


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->