மதுரையில் கொடூரம்: பிளஸ்-2 மாணவியின் வாழ்க்கையைச் சீரழித்து கர்ப்பமாக்கிய மெக்கானிக்...! - போக்சோ சட்டத்தில் கைது...!
Cruelty Madurai Mechanic who ruined life Plus 2 student and made her pregnant Arrested under POCSO Act
மதுரை மாவட்டம் அருகில் பரவை பவர்ஹவுஸ் எதிரே உள்ள கணபதி நகரை சேர்ந்த 37 வயதான முத்துமணி, கப்பலூர் பகுதியில் செயல்பட்டு வரும் கார் ஷோரூமில் மெக்கானிக்காக பணியாற்றி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இந்த நிலையில், 17 வயது பிளஸ்-2 மாணவி ஒருவர் வீட்டில் தனியாக இருந்த நேரத்தில், அங்கு சென்ற முத்துமணி மாணவியை கத்தியால் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இந்த சம்பவத்தை யாரிடமும் தெரிவித்தால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இதனால் கடும் அச்சமடைந்த மாணவி, நடந்த கொடுமையை வெளியில் தெரிவிக்காமல் மனவேதனையுடன் இருந்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், மாணவியின் உடல்நிலையில் ஏற்பட்ட மாற்றங்களை கவனித்த அவரது தாயார், சந்தேகத்தின் பேரில் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை மேற்கொண்டார். அப்போது மாணவி 7 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தகவலை அறிந்த மாணவியின் தாய் அதிர்ச்சியடைந்து, மகளிடம் விசாரித்தபோது நடந்த சம்பவங்களை மாணவி கதறி அழுதபடி தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து, மாணவியின் தாய் சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் விசாரணையில் இறங்கிய காவலர்கள், போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து முத்துமணியை கைது செய்துள்ளனர்.
English Summary
Cruelty Madurai Mechanic who ruined life Plus 2 student and made her pregnant Arrested under POCSO Act