காதலன் கேட்ட 'பரிசு'... கம்பி எண்ணும் காதலி...! - தோழிகளை ஆபாச வீடியோ எடுத்து அனுப்பிய இளம்பெண் அதிரடி கைது...!
gift her boyfriend asked girlfriend counts wires young woman who sent pornographic video her friends arrested
நெல்லையில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்காக செயல்பட்டு வரும் தனியார் விடுதியில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் வெளியாகியுள்ளது.அந்த விடுதியில், நெல்லை டவுன் செங்குந்தர் நடுத்தெருவை சேர்ந்த மகர ஜோதி (39) என்பவர் தனது குழந்தைகளுடன் சில மாதங்களுக்கு முன்பு வந்து தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், சமீப நாட்களாக அவரது நடவடிக்கைகளில் சந்தேகத்திற்கிடமான மாற்றங்கள் காணப்பட்டதாகவும், விடுதியில் தங்கி இருந்த பிற பெண்களை அவர்களுக்கு தெரியாமல் செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோவாக பதிவு செய்து வந்ததாகவும் புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, மகர ஜோதியின் செல்போன் ஆய்வு செய்யப்பட்டபோது, விடுதியில் தங்கியிருந்த பெண்களின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கண்ணன் என்ற நபருக்கு அனுப்பியிருந்தது தெரியவந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக விடுதியின் காப்பாளர், பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் ஆய்வாளர் நாககுமாரி தலைமையிலான காவலர்கள் விசாரணை நடத்தி, 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த விசாரணையின் போது, தனது காதலன் கண்ணனை மகிழ்விப்பதற்காகவே இவ்வாறு செயல்பட்டதாக மகர ஜோதி பரபரப்பான வாக்குமூலம் அளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், பல்வேறு கோணங்களில் பெண்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து அனுப்புமாறு காதலன் கண்ணன் தொடர்ந்து வற்புறுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, ஆய்வாளர் தலைமையிலான காவலர்கள் மகர ஜோதியை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், கண்ணன் கோவையில் வசித்து வருவது உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இதைத் தொடர்ந்து, கண்ணனை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு, காவலர்கள் கோவைக்கு விரைந்துள்ளதாகவும், விரைவில் அவரும் கைது செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
gift her boyfriend asked girlfriend counts wires young woman who sent pornographic video her friends arrested