அதிமுகவிலிருந்து விலக முடிவெடுத்தாரா இசக்கி சுப்பையா...? - அரசியல் வட்டாரத்தில் பகீர் கிளப்பும் தகவல்...! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அ.தி.மு.க.வில் ஏற்பட்ட உள்கட்சிப் பரபரப்பு தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. கட்சிக்குள் எடப்பாடி பழனிசாமி அணி மற்றும் சி.வி. சண்முகம் அணி என இரு பிரிவுகள் உருவான நிலையில், சண்முகம் தரப்பினர் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்து வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

இந்த சூழலில், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சத்தியபாமா, ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ. ஜெயக்குமார் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல் ஆகியோர் நேற்று தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்தனர்.

இதையடுத்து, அவர்கள் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் தவெகவில் இணைந்த சம்பவம் தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில், அம்பாசமுத்திரம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையாவும் கட்சியில் இருந்து விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகி அரசியல் பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது.

அதேபோல், அவர் விரைவில் தவெகவில் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.எனினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகாத நிலையில், தமிழக அரசியல் களத்தில் பல்வேறு யூகங்களும் எதிர்பார்ப்புகளும் நிலவி வருகின்றன.

யார் இந்த இசக்கி சுப்பையா?
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அம்பாசமுத்திரம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட இசக்கி சுப்பையா, காங்கிரஸ் மற்றும் தவெக வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளி 10 ஆயிரத்து 245 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அவர் ஏற்கனவே 2011 மற்றும் 2021 சட்டசபை தேர்தல்களிலும் அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, 2011 ஆம் ஆண்டு அப்போதைய முதல் அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் அவருக்கு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டிருந்தது.

அம்பாசமுத்திரம் தொகுதி மக்களிடையே நீண்டகால அரசியல் அனுபவம் மற்றும் மக்கள் தொடர்பு மூலம் தனித்த செல்வாக்கை பெற்ற அரசியல்வாதியாக இசக்கி சுப்பையா அறியப்படுகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Has Isakki Subbaiya decided quit AIADMK Information that causing stir political circles


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->